அருள்மிகு கதலிநரசிங்கப்பெருமாள் திருக்கோயில், அம்மைநாயகனூர் - 624201, திண்டுக்கல் .
Arulmigu Kathalinarasingaperumal Temple, Ammainayakanur - 624201, Dindigul District [TM032268]
×
Temple History
தல வரலாறு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், அம்மைநாயக்கனூர், அருள்மிகு கதலி நரசிங்கப் பெருமாள் திருக்கோயில் மதுரை, திண்டுக்கல் மெயின் ரோட்டின் மேற்கு புறமாக மதுரையிலிருந்து வடக்காக 50 கிலோ மீட்டர் தொலைவிலும், திண்டுக்கல்லில் இருந்து தெற்காக 25 கிலோ மீட்டர் தொலைவிலும் கொடைரோடு தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் அம்மைநாயக்கனூரில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில், கி.பி.1239 முதல் 1251 முடிய மதுரையை ஆண்ட இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டதாகும்.
அம்மைநாயக்கனூர், நாயக்கர் ஆட்சி காலத்தில் ஒரு பாளையமாக விளங்கியது. அம்மைநாயக்கனூரின் முதல் ஜெமீனாக பெஞ்சை மாக்கிய கூலப்ப நாயக்கர் விளங்கினார். 2வது ஜெமீனாக அம்மைய லக்கம நாயக்கர் விளங்கினார்....திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், அம்மைநாயக்கனூர், அருள்மிகு கதலி நரசிங்கப் பெருமாள் திருக்கோயில் மதுரை, திண்டுக்கல் மெயின் ரோட்டின் மேற்கு புறமாக மதுரையிலிருந்து வடக்காக 50 கிலோ மீட்டர் தொலைவிலும், திண்டுக்கல்லில் இருந்து தெற்காக 25 கிலோ மீட்டர் தொலைவிலும் கொடைரோடு தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் அம்மைநாயக்கனூரில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில், கி.பி.1239 முதல் 1251 முடிய மதுரையை ஆண்ட இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டதாகும்.
அம்மைநாயக்கனூர், நாயக்கர் ஆட்சி காலத்தில் ஒரு பாளையமாக விளங்கியது. அம்மைநாயக்கனூரின் முதல் ஜெமீனாக பெஞ்சை மாக்கிய கூலப்ப நாயக்கர் விளங்கினார். 2வது ஜெமீனாக அம்மைய லக்கம நாயக்கர் விளங்கினார். 3வது ஜெமீனாக கொந்தி பொம்மள நாயக்கர் விளங்கினார் இவரது காலத்தில் கி.பி.1563ல் இத்திருக்கோயில் பெரிய கோயிலாக புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளன என்பது பாளையப்பட்டுக்களின் வரலாறு என்ற நூலில் இருந்து தெரியவருகிறது.
இத்திருக்கோயில் சுமார் 5 ஏக்கர் பரப்பில் அமையப் பெற்றுள்ளது. முன்புறம் மைதானம், மைய மண்டபத்துடன் திருக்குளம் ஆகியவை அமையப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் சுவர்கட்டி கடந்த 24.10.1928ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி திரு. சந்திரசேகர சுவாமிகளால் அப்போதைய ஜெமீன்தாரர் திரு. ராமசாமி ஜெமீன்தார் அவர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
முன் மண்டபத்திலிருந்து பெரியகதவு வழியாக நுழைந்ததும் வலப்புறத்தில் சனி மூலையில் பைரவர் சன்னதியும், நுழைவாயிலுக்கு நேர் எதிரே கொடி மரமும் அமையப் பெற்றுள்ளது சுவாமி சன்னதியின் வலப்புறம் கமல வள்ளி தாயார் சன்னதியும் அதன் பின்புறமாக சக்கரத்தாழ்வார் சன்னதியும் உள்ளது.
கர்ப்பகிரகத்தில் சுயம்பு லிங்கம் (கதலீஸ்வரர்) நரசிங்கப் பெருமாளும் ஒரே கருவறையில் குடி கொண்டிருப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். இதற்கு காரணமாக செவி வழிச் செய்தி ஒன்று உள்ளது.
ஒரு சமயம் விஜய நகரப் பேரரசர் மதுரை செல்லும் வழியிலே அம்மைநாயக்கனூரில் தங்க நேருகிறது. உணவு உட்கொள்ளும் வேளையது. தீவிர வைஷ்ணவரான பேரரசர் பெருமாளை சேவிக்காமால் உணவு அருந்தும் வழக்கம் இல்லாதவர். எனவே பெருமாளை தரிசிக்க விரும்புகிறார் அம்மைநாயக்கனூரில் வைணவக் கோயில் கிடையாது. சிவன் கோயில் மட்டுமே உள்ளது. பேரரசர் பசியால் மிகவும் துவண்டு பெருமாளை தியானிக்கிறார். அது சமயம் அழகிய சிங்கர் என அறிமுகம் செய்து கொண்டு அரசரிடம் வந்த வைணவத் துறவி, கோயிலில் பெருமாளும் இருக்கிறார், வந்து சேவித்துவிட்டு உணவு அருந்துங்கள் என்று அரசரை அழைக்கிறார். பெருமாளை தரிசிக்கும் எனது கண்கள் வேறுயாரையும் தரிசிக்காது உனவே எனது கண்களை கட்டி அழைத்துச் செல்லுங்கள் என்று அரசர் கூறுகிறார். அரசரின் கண்கள் கட்டப்பட்டு அழைத்து செல்லப்படுகிறார். கோயிலின் உள்ளே வந்த அரசர் மூலவரை தன்னிரு கைகளால் தடவிய போது சங்கும் சக்கரமும் பெருமாளின் அம்சமாக தெரிகிறது. அது கண்டு மகிழ்ந்து அரசர் கண்கட்டை அவிழ்த்து பார்த்த போது சிவலிங்கம் மட்டுமே தெரிகிறது உடன் வந்த அழகிய சிங்கர் என்ற வைணவத் துறவியும் மறைந்து விட்டார். எண்ணே இறைவனின் திருவிளையாடல் அரியும், சிவனும் ஒன்றே என்பதற்கு இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. அதன்பின் நரசிங்கப்பெருமாளையும் கர்ப்பகிரகத்தில் வைக்கப்பட்டு கதலீசுவர நரசிங்கப்பெருமாள் என்றாகிறது.
இத்திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அதுசமயம் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகளும் அதிவிமர்சையாக நடைபெறுகின்றது.