அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனுர் - 625515, தேனி .
Arulmigu Poolanantheesvarar Temple, Chinnamanur - 625515, Theni District [TM032285]
×
Temple History
தல பெருமை
பாண்டியநாட்டை ஆண்ட புல பூடண பாண்டிய மன்னனின் இளைய குமாரன் இராஜசிங்கபாண்டியன் வேட்டை மார்க்கமாய் பூலாவனத்தின் மேற்கே சுரபி நதி அருகில் உள்ள பூலமரக் காட்டை கண்டான். தனக்கு தினந்தோறும் பால் கொண்டு வரும் ஆயர் குலத்தலைவன் கால் தடுக்கி பால் முழுவதும் பூலாமரத்தின் அருகில் கொட்டியது அடுத்தடுத்த நாட்கள் அவ்வாறே நிகழ்ந்ததை கண்டு ஆயன் சினத்துடன் எழுந்து பூலாமரத்தின் வேரை வெட்டினான். செங்குருதி வெள்ளம் போல் வெளியேறியது. அஞ்சி நடுங்கி அரசனிடம் விவரம் தெரிவித்தான் அரசன் பதறி எழுந்து சிவ லிங்கத்தினின்று பெருகிய செங்குறுதி கண்டு துணுக்குற்றான். ஆழ்ந்து துதி்க்கின்றான் உடனே செங்குருதி மாறி ஆகாயம் ஊடுறும் படி ஜோதி மழையாக நின்றது. என்னை ஆட்கொள்ள வந்த இறைவனே என்று இறைஞ்சி...பாண்டியநாட்டை ஆண்ட புல பூடண பாண்டிய மன்னனின் இளைய குமாரன் இராஜசிங்கபாண்டியன் வேட்டை மார்க்கமாய் பூலாவனத்தின் மேற்கே சுரபி நதி அருகில் உள்ள பூலமரக் காட்டை கண்டான். தனக்கு தினந்தோறும் பால் கொண்டு வரும் ஆயர் குலத்தலைவன் கால் தடுக்கி பால் முழுவதும் பூலாமரத்தின் அருகில் கொட்டியது அடுத்தடுத்த நாட்கள் அவ்வாறே நிகழ்ந்ததை கண்டு ஆயன் சினத்துடன் எழுந்து பூலாமரத்தின் வேரை வெட்டினான். செங்குருதி வெள்ளம் போல் வெளியேறியது. அஞ்சி நடுங்கி அரசனிடம் விவரம் தெரிவித்தான் அரசன் பதறி எழுந்து சிவ லிங்கத்தினின்று பெருகிய செங்குறுதி கண்டு துணுக்குற்றான். ஆழ்ந்து துதி்க்கின்றான் உடனே செங்குருதி மாறி ஆகாயம் ஊடுறும் படி ஜோதி மழையாக நின்றது. என்னை ஆட்கொள்ள வந்த இறைவனே என்று இறைஞ்சி நிற்க இறைவனும் அரசனின் அளவுக்கு அளவாய் நின்றருளினார். ஆனந்தத்தில் இறைவனை ஆறத் தழுவினான். அரசனுடைய முக மண்டலமும் மார்பில் அணிந்திருந்த ஆரமும் அவனது கைக் கடகங்களும் பதிந்து இன்றளவும் மூலவரில் தெள்ளத் தெளிவாக உள்ளது. சிவ பெருமான் பூலாமரத்தில் இருந்தமையால் பூலாவனேசர் மற்றும் பூலாநந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்