Screen Reader Access     A-AA+
அருள்மிகு ராமசாமி திருக்கோயில், ஊராளிப்பட்டி, பண்ணைக்காடு - 624210, திண்டுக்கல் .
Arulmigu Ramasamy Temple, Ooralpatti, Pannaikadu - 624210, Dindigul District [TM032295]
×
Temple History

தல வரலாறு

வரலாற்றின் முன் பகுதி ஆரம்ப காலகட்டத்தில் பண்ணைக்காடு நேரிய கரிய மன்னாடியார் என்ற பெரியவரால் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற தத்துவத்தை நினைவூட்டும் வகையில் பண்ணைக்காட்டில் அவருடைய முயற்சியால் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பண்ணைக்காடு நேரிய கரிய மன்னாடியா் என்னும் தெய்வீக ஞானம் படைத்த பெரியவா் கனவில் ஸ்ரீ ரகுராமரே தோன்றி பண்ணைக்காடு அருகே காளையான் காட்டின் படா்ந்துள்ள பூசணிக்காய் கொடியில் பூசயணிக்காயாய் நான் எழுத்தருளி இருக்கிறேன் நீ வந்து உன் தலையில் சுமந்து வந்து ஊரல்பட்டியில் நீ மக்கள் நலனுக்காக எழுப்பியுள்ள திருக்கோயிலில் வைத்து பூஜித்து எல்லோருக்கும் நலம் சோ்ப்பாயாக என்று கூறியதன்படி மேற்கண்ட பெரியவா் பண்ணைக்காடு அருகே அமைந்துள்ள காளையங்காடு சென்று பக்தி சிரத்தையுடன் அந்த அற்புதமான பூசணி பழத்தை எடுத்து...