Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தென்கரை, பெரியகுளம் - 625601, தேனி .
Arulmigu Balasubramaniyaswamy Temple, Thenkarai, Periyakulam - 625601, Theni District [TM032296]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் பாண்டிய நாட்டில் சோழ மன்னனான இஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருங்கோயிலாகும், அவ்வகையில் இறைவனின் திருநாமம் இராஜேந்திர சோழீஸ்வரர் எனப் பெயர் பெற்றது, அம்பாள் பெயர் அறம் வளர்த்த நாயகி ஆகும், இத்திருத்தலம் கட்டிட அமைப்பில் முக்கியத்துவம் பெற்றது, எந்தத் திருக்கோயிலிலும் இல்லாதபடி சுவாமி அம்பாள் பாலசுப்பிரமணியர் ஆகிய முன்று கொடிமரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன, பாண்டியர் காலத்தில் ஆரம்பித்து சோழர் காலத்தில் கட்டப்பெற்று நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிசேகம் நடத்தப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது, திருவிளையாடற்புராணத்தில் பன்றிகளுக்கு மோட்சம் கொடுத்த இடம் இத்திருத்தலமாகும், இதனை விளக்கும் வகையில் அரிய சிற்பங்கள் சுப்பிரமணியன் சன்னதியில் வடவமைக்கப்பட்டுள்ளன, இத்திருக்கோயிலில் தென்வடல் அடியும் கிழமேல் ௨௨௨ அடியும் உள்ளது, இப்பெருங்கோயிலில் அதிகாரநந்தி சன்னதி தொடங்கி சண்டிகேஸ்வரர் சன்னதி...