Screen Reader Access     A-AA+
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், C.புதுப்பட்டி - 626424, தேனி .
Arulmigu Neelakandeswarar Temple, C.Pudhupatti - 626424, Theni District [TM032319]
×
Temple History

தல வரலாறு

தேனி மாவட்டத்தில் சுரபி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் க.புதுப்பட்டி அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயிலும் முக்கியமான கோயிலாகும்.இத்திருக்கோயில் வயல் வெளிகளுக்கு மையத்தில் ரம்யமான சூழலில் காணப்படுகிறது. இத்திருக்கோயில் தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உத்தமபாளையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் காணப்படுகிறது. இத்திருக்கோயிலை கட்டிய வரலாறு தெரியாத நிலையில் பழங்காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும்.இது சுரபி நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.ஈஸ்வரன் லிங்க வடிவில் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார்.சுற்றிலும் மரங்கள் அடர்ந்த குளிச்சியான சூழலில் அமைந்து காணப்படுவது இதன் தனிச் சிறப்பான அம்சமாகும். ...