தல பெருமை
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், பழங்காநத்தம் ஊரின் மேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஸ்தலம் மிகவும் பழமையான கோயிலாகும். இத்திருக்கோயில் கருங்கற்கலால் கட்டப்பட்ட 150 முதல் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயின் தெற்கு பகுதியில் ஊரணி ஒன்று உள்ளது, இத்திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலமாகும். இத்திருக்கோயில் காலை 7.00மணி முதல் 9,00மணி வரை திறந்திருக்கும். இத்திருக்கோயில் கருவறையில் (கோதண்டராமர், லெட்சுமணன், சீதை மற்றும் ஆஞ்சிநேயர் சிலா விக்ரங்கள் உள்ளன.கருவறைக்கு முன்பு மண்டபம் உள்ளது. கோயில் வெளிபிரகாரத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இத்திருக்கோயிலில் பிராத்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது இப்பகுதி மக்களின் கூற்றாகும்.