அருள்மிகு அருணாசலேஸ்வரர் (ம) வரதராஜ பெருமாள் திருக்கோயில், சௌகார்பேட்டை, சென்னை - 600079, சென்னை .
Arulmigu Arunachaleswarar And Varadaraja Perumal Temple, Sowcarpet, Chennai - 600079, Chennai District [TM000329]
×
Temple History
தல வரலாறு
திருத்தல வரலாறு இத்திருக்கோயில் திருவண்ணாமலை திருத்தலத்தினை அடிப்படையாக கொண்டு அருள்மிகு அண்ணாமலையாரை சென்னையில் இருந்து வணங்கும் பொருட்டு சுமார் ஆண்டுகளுக்கு முன்பு திருவாளர் மயிலை சுப்புராய முதலியார் அவர்களால் கட்டப்பட்டதாக தெரியவருகிறது. வருடந்தோறும் கார்த்திகை தீப தரிசனத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று வந்தவர் ஒரு வருடம் செல்ல முடியாமையில் சென்னையில் சௌகார்பேட்டையில் இத்திருக்கோவிலை கட்டுவித்தார். காசியிலிருந்து பாணலிங்கம் தருவித்து பிரதிஷ்டை செய்து அருள்மிகு அணி அண்ணாமலையார் சன்னதி கட்டப்பட்டது. இதில் அருள்மிகு விநாயகர் அருள்மிகு சுப்பிரமணியர்அருள்மிகு உண்ணாமுலை அருள்மிகு வராகி அருள்மிகு மஹிஷாசுரமர்தினி மற்றும் அருள்மிகு காலபைரவர் ஆகிய...திருத்தல வரலாறு இத்திருக்கோயில் திருவண்ணாமலை திருத்தலத்தினை அடிப்படையாக கொண்டு அருள்மிகு அண்ணாமலையாரை சென்னையில் இருந்து வணங்கும் பொருட்டு சுமார் ஆண்டுகளுக்கு முன்பு திருவாளர் மயிலை சுப்புராய முதலியார் அவர்களால் கட்டப்பட்டதாக தெரியவருகிறது. வருடந்தோறும் கார்த்திகை தீப தரிசனத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று வந்தவர் ஒரு வருடம் செல்ல முடியாமையில் சென்னையில் சௌகார்பேட்டையில் இத்திருக்கோவிலை கட்டுவித்தார். காசியிலிருந்து பாணலிங்கம் தருவித்து பிரதிஷ்டை செய்து அருள்மிகு அணி அண்ணாமலையார் சன்னதி கட்டப்பட்டது. இதில் அருள்மிகு விநாயகர் அருள்மிகு சுப்பிரமணியர்அருள்மிகு உண்ணாமுலை அருள்மிகு வராகி அருள்மிகு மஹிஷாசுரமர்தினி மற்றும் அருள்மிகு காலபைரவர் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இதன் பின்னர் அருகாமையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் சுற்றும் சுற்று பிரகார சன்னதிகள் எழுப்பட்டன. ல் ராஜகோபுரம் கட்டப்பட்டு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டது மேலும் காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் ரூபமாக இங்கு அருள்மிகு வரதராஜப்பெருமாள் சன்னதியும் கட்டப்பட்டுள்ளது. ஓரே திருக்கோவிலில் சிவன் சன்னதியும் விஷ்ணு சன்னதியும் ஒருங்கே அமைந்துள்ளது சிறப்பம்சம் ஆகும். அருள்மிகு அணி அண்ணாமலையார் சன்னதியில் சுமார் ஆண்டுகளுக்கு முன்னதாக மௌனகுருசித்தர் சுவாமிகள் தினந்தோறும் வருகை புரிந்து அனைவரும் அருளாசி வழங்கியுள்ளார்கள்.
தல பெருமை
பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றானதும், நினைத்தவுடன் முக்தியை தரக்கூடிய திருத்தலமான திருவண்ணாமலை ஷேத்திரனை திருநாவுக்கரசு சுவாமிகள் திருபெருந்துரையிலிருத்தே சோதியே சுடரே என்னும் பாசுரத்தைப் பாடித் திருவண்ணாமலை தீப தரிசனம் செய்தது போல தெய்வ மணம்கமழும் தமிழ் நாட்டின் தலைநகராம் தருமமிகு சென்னையில் திருவண்ணாமலை ஆலயத்தின் அமைப்பைக் கொண்டு எழுப்பட்டுள்ள இந்த ஆலயம் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாளர் மயிலை சுப்புராய முதலியாரவர்களால் கட்டுவித்தாக தெரிகிறது.
இவர் வருடந்தோறும் கார்த்திகை தீப தரிசனத்திற்குத் திருவண்ணாமலை ஷேத்திரைத்திற்குச் சென்று வந்தவர்இ ஒருவருடம் செல்ல முடியாமையால் சென்னையிலிருந்தே அண்ணாமலை காத்திகை தீபத்தை எண்ணி இவ்வாலயத்தை கட்டுவித்தர்.
...பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றானதும், நினைத்தவுடன் முக்தியை தரக்கூடிய திருத்தலமான திருவண்ணாமலை ஷேத்திரனை திருநாவுக்கரசு சுவாமிகள் திருபெருந்துரையிலிருத்தே சோதியே சுடரே என்னும் பாசுரத்தைப் பாடித் திருவண்ணாமலை தீப தரிசனம் செய்தது போல தெய்வ மணம்கமழும் தமிழ் நாட்டின் தலைநகராம் தருமமிகு சென்னையில் திருவண்ணாமலை ஆலயத்தின் அமைப்பைக் கொண்டு எழுப்பட்டுள்ள இந்த ஆலயம் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாளர் மயிலை சுப்புராய முதலியாரவர்களால் கட்டுவித்தாக தெரிகிறது.
இவர் வருடந்தோறும் கார்த்திகை தீப தரிசனத்திற்குத் திருவண்ணாமலை ஷேத்திரைத்திற்குச் சென்று வந்தவர்இ ஒருவருடம் செல்ல முடியாமையால் சென்னையிலிருந்தே அண்ணாமலை காத்திகை தீபத்தை எண்ணி இவ்வாலயத்தை கட்டுவித்தர்.
இச் சென்னையில், திருவண்ணாமலை ஷேத்திர மூர்த்தியின் ரூபமாக முதன் முதலில் நிர்மானித்து , ஸ்ரீ காசிஷேத்திரத்திலிருந்து பாண லிங்கம் தருவித்துப் பிரதிஷ்டை செய்துஇ தற்போது சின்ன கோயிலென்று வழங்கும் அணி அண்ணமாலையார் ஆலயம் கட்டப்பட்டதாகவும், இவ்வாயத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர் , ஸ்ரீ அம்பாள், ஸ்ரீ வராகி , ஸ்ரீ காளி, ஸ்ரீ பைரவர் முதலிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், அறியப்படுகிறது.
தலத்தின் சிறப்பு
இந்த அணி அண்ணாமலையர் சன்னதியில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு, மௌனகுரு சித்தர் சுவாமிகள் அவர்கள் தினந்தோறும் வருகை புரிந்து அனைவருக்கும் அருளசி வழங்கியுள்ளார்கள்.
மேலும், இத்திருக்கோயில் சிவனையும் விஷ்ணுவையும் ஒருங்கே வழிபடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது, இவ்வாட்டாரத்தில் ஸ்ரீ அருணாசலேசுவரர் மற்றும் வரதராசப் பெருமாள் என்ற திருநாமப் பெயரில் சைவஸ்தலமும், வைணவ ஸ்தலமும், ஒரே இடத்தில் அமைந்து மேலும் . இத்திருக்கோயிலுக்கு பெருமை சேர்க்கின்றன.
.இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அபீதகுசாம்பாள சமேத அருள்மிகு அருணாச்சலேசுவரருக்கு காமிகாகமப்படி, காலை 7.00 மணிக்கு காலை சந்தியும் முற்பகல் 11. 00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.00 மணிக்க சாயரட்சை பூஜையும், இரவு 8.30 மணிக்கு அர்த்த சாமப் பூஜையும் , தினந்தோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிக ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத அருள்மிகு வரதராச் பெருமாளுக்கு வைகானச ஆகமப்படி தினத்தோறும் பூஜைகள் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வமரமாகும்.
.
.