அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், முத்தியால்பேட்டை, சென்னை - 600001, சென்னை .
Arulmigu Angala Parameshwari Temple, Muthialpet, Chennai - 600001, Chennai District [TM000347]
×
Temple History
தல வரலாறு
வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும்தவம் செய்து சிவ தரிசனம் பெற்றான் பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எந்த ஆயுதத்தாலும், தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். அதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்று ஆணவத்தில் தேவர்களை துன்ப படுத்தினான்.
அழியாவரம் பெற்ற வல்லாள கண்டன் 108 பெண்களை மணந்தான். அவ்வாறு மணந்தாலும் அவனுக்கு குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை. குழந்தை இல்லாத அவன் மேலும் தளி கெட்டு திரிந்தான்.
வல்லாள கண்டன் கொடுமைக்கு முடிவு கட்ட சிவபெருமான் முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறுபிறவிகள் எடு ஏழாவது பிறவு பற்றி பிறகு சொல்வேன்...வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும்தவம் செய்து சிவ தரிசனம் பெற்றான் பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எந்த ஆயுதத்தாலும், தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். அதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்று ஆணவத்தில் தேவர்களை துன்ப படுத்தினான்.
அழியாவரம் பெற்ற வல்லாள கண்டன் 108 பெண்களை மணந்தான். அவ்வாறு மணந்தாலும் அவனுக்கு குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை. குழந்தை இல்லாத அவன் மேலும் தளி கெட்டு திரிந்தான்.
வல்லாள கண்டன் கொடுமைக்கு முடிவு கட்ட சிவபெருமான் முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறுபிறவிகள் எடு ஏழாவது பிறவு பற்றி பிறகு சொல்வேன் என்றார் சிவன்,
அதன்படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள் பாலித்தார், காளியாக உருவெடுத்தபோது சிவனையும் விஞ்சிய சக்தியாக எண்ணி அவரை நடன போட்டிக்கு அழைத்தாள், அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள், வெட்கம் தாளாமல் தன்னையே எரித்துக் கொண்டாள், அவளது அங்கம் நெருப்பில் வெந்தது, அங்கம் என்றால் உடல்.
சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன், அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கத்தில் இருந்து பிறந்தததனால் அங்காளம்மன் எனப்பட்டார், காளி தேவியை அங்காளம்மனாக பிறந்தாள், அங்காளம் என்று சொல்லுக்கு இணைத்தல் என்று பொருளாகும்.