அருள்மிகு சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில், பூங்கா நகர், சென்னை - 600003, சென்னை .
Arulmigu Chennai Malleswarar Chenna Kesava Perumal Temple, Park Town, Chennai - 600003, Chennai District [TM000351]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர் சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில்
...அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர் சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில்
தல வரலாறு
தொண்டை மண்டலப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னைப் பட்டினம் என்று பழங்காலப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். கடற்கரையைச் சார்ந்து இத்திருக்கோயில்கள் அமைந்திருந்தன.
உயர்நீதி மன்றத்தில் தென்புறத்தில், ரிசர்வ் வங்கிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர், அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில் சென்னையின் இருவிழிகளாய் சைவமும், வைணவமும் இணைந்து காண்பார் விழிகளை ஈர்த்தது. இச்சோலைப் பகுதியில் மல்லிகை மலர்கள் மணம் வீசி குலுங்கியதால் எம்பெருமாள் மல்லீசுவரர் எனும் பெயர் பெற்றிருக்கலாம்.
சாதி மத பூசல்களைக் கடந்து நீதிகளை வழங்கி வரும் சென்னை உயர்நீதி மன்றம் அன்றைய சென்னை நகரின் தோற்றமாகும். இன்றைய எழில்மிகு சென்னை அன்றைய காலத்தில் சோலைகளாய் பூத்துக் குலுங்கிய சென்னி கேசவபுரம் அதை எண்ணி எண்ணி மகிழ்வடையும் ஆனந்தபுரம்.
நகரின் நடுவில் இருவிழிகளாய் இரண்டு கோயில்கள் இணைந்து இருக்கின்றன.மனதில் நிறைந்திருக்கின்றன.
பட்டணம் கோயில், பூக்கடை கோயில் என்றதும், இந்த இரு திருக்ககோயில்கள்தான் எவர் நினைவிலும் உடன் தோன்றும்.
நகரின் சென்னி (தலை) போல் இருந்த கேசவர் கோயிலாய் இப்பகுதி சென்னி நகர் என்றாகி, பின்னர் சென்னை நகர் என்றழைக்கப்பட்டது. நகரின் சென்னி (தலை) போல் இருந்த கேசவர் கோயிலாய் இப்பகுதி சென்னி நகர் என்றாகி, பின்னர் சென்னை நகர் என்றழைக்கப்பட்டது.
பிறைதங்கு சடையனை வலம் வைத்தான் என்று திருமங்கை ஆழ்வாரால் அருள்மிகு கேசவப் பெருமாள் புகழ்ந்து போற்றப்பட்டார். பிறை சூடிய பெருமானிய சிவபெருமானும், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலும் அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர் அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் ஒருங்கிணைந்து திருக்கோயிலினுள் திருவருள் தருகின்றார்கள்.
கண்களை கவரும் வண்ணம் திருக்கோயலின் முகப்பு கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறது. முன்வாயிலில் தென்றல் காற்றும் வீசிய வண்ணம் தமிழ் பேசும் மங்கலகரமாக மலர்களும், இறைவனின் திருவுருவப் படங்களும் குங்குமமும் மஞ்சளும் நிறைந்த நிலையில் கண்களையும் மனைதையும் கவரும் வண்ணம் திருக்கோயிலினுள் நுழையும் முன் மனதில் நுழைந்து மகிழ்வினை கொடுக்கும் தலமாக உள்ளது.
சைவ, வைணவ ஒற்றுமையை உலகறியும் வண்ணம் இங்கே காணலாம். 1964 ல் நாகப்பட்டர் என்பவரும், 1648 ல் திம்மப்பர் என்பவரும் இத்திருக்கோயிலுக்கு மான்யம் வழங்கினர். தர்மகர்த்தாவாக டேர் திம்மப்பர் அயராது செயலாற்றி திருக்கோயலை வளமுடன் வைத்திருந்தார். இத்திருக்கோயிலை நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடவில்லை என்றாலும் திருவான்மியூரை வணங்கிய திருநாவுக்கரசர்
வரைவளர்மா மயிலென்ன மாடமிசை மஞ்சாடும்
தரைவளர் சீர்த்திரு மயிலை சங்கரனார் தாள் வணங்கி
உரைவளர் மாலை களனிவித்துழவார் படையாளி
திரை வளர்வேலைக்கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார்,,,,,
என்று பெரிய புராணப்பாடல் இக்கடற்கரை கோயில்களைப் பற்றி பறைசாற்றியுள்ளன. இதன் மூலம் இத்திருக்கோயலின் பழமையையும் பெருமையையும் உணர முடிகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திரம் சென்னை பாரிமுனை அருகிலுள்ள அங்கப்ப நாயக்கன் தெரு வரை பரவியிருந்தது. ஆகவே இக்கோயில்கள் அக்காலத்தில் கடற்கரை கோயில்கள் என்று அழைக்கப்பட்டன.
ஓம் நமச்வாய
ஓம் நமோ நாராயணாயா