தல பெருமை

அங்காள பரமேஸ்வரியம்மன் அயோத்தியில் பிறந்ததாக சரித்திரம். ஆதி முத்துலட்சுமி என்பது அம்மனின் பெயராகும். ஆதி முத்துலட்சுமியை உயிருடன் அயோத்தியிலிருந்து மண் தாழியில் வைத்து அடைத்து ஆற்றில் விட்டதாகவும், அம்மையார் ஏனாதி செங்கோட்டையின் வடக்கில் அமைந்துள்ள அய்யனார் கோயிலில் இறந்து அடைக்கலம் அடைந்ததாகவும், மக்கள் கூடி முதுலட்சுமியை எடுத்து ஊரின் தெற்குபுறம் உள்ள மரத்தடியில் வைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்காள பரமேஸ்வரியை இவ்வூரார் அங்காளம்மன் என்றும், ஆதி முத்துலட்சுமி என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில் குடி கொன்டிருக்கும் அம்மனின் பார்வை கருட பார்வையாகும். அம்மனின் இந்த பார்வை தவறு செய்பவர்கள் யாரும் தப்புவது இல்லை என்பது ஐதீகம்.