அருள்மிகு தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயில், Allinagaram - 630611, சிவகங்கை .
Arulmigu Thandeeswara Iyanar Temple, Allinagaram - 630611, Sivagangai District [TM035705]
×
Temple History
தல பெருமை
அல்லிநகரம் கிராமத்திற்கு தெற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ள இடச்சியூரணியிலிருந்து பல நபர்கள் பால், தயிர், நெய் போன்ற பொருட்களை கால்நடையாய் சுமந்து சென்று விற்று வந்தனர். ஒரு நாள் ஒரு நபர் கொண்டு வந்த பால் கால் இடரி கீழே கொட்டிவிட்டு மனம் நொந்து வீட்டிற்கு சென்று விட்டார். அதே போல் அடுத்த நாளும் வேரோரு நபரும் கால் இடரி அதே இடத்தில் பால் கீழே கொட்டிவிட்டது. இதே போல் பலருக்கும் நடக்கவே அந்த இடத்தில் பொதுமக்கள் கூடி கடப்பாரை மற்றும் மண்வெட்டியால் அந்த இடத்தை தோண்டினர். அந்த இடத்திலிருந்து ரத்தம் வலிந்து ஓடியது. பொதுமக்கள் ஒன்று கூடி சாமி இறங்கி அந்த இடத்தில் மகா யோகி அவதரித்திருகிறார் என்றும்,...அல்லிநகரம் கிராமத்திற்கு தெற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ள இடச்சியூரணியிலிருந்து பல நபர்கள் பால், தயிர், நெய் போன்ற பொருட்களை கால்நடையாய் சுமந்து சென்று விற்று வந்தனர். ஒரு நாள் ஒரு நபர் கொண்டு வந்த பால் கால் இடரி கீழே கொட்டிவிட்டு மனம் நொந்து வீட்டிற்கு சென்று விட்டார். அதே போல் அடுத்த நாளும் வேரோரு நபரும் கால் இடரி அதே இடத்தில் பால் கீழே கொட்டிவிட்டது. இதே போல் பலருக்கும் நடக்கவே அந்த இடத்தில் பொதுமக்கள் கூடி கடப்பாரை மற்றும் மண்வெட்டியால் அந்த இடத்தை தோண்டினர். அந்த இடத்திலிருந்து ரத்தம் வலிந்து ஓடியது. பொதுமக்கள் ஒன்று கூடி சாமி இறங்கி அந்த இடத்தில் மகா யோகி அவதரித்திருகிறார் என்றும், சிவன் என்றும், ஆதி மூலம் என்றும், கால் தட்டி விட்டதால் தண்டீஸ்வரர் என்றும், தன்னை வணங்குபவர்களுக்கு அருள் வழங்குவேன் என்றும் கூறினார். அன்றிலிருந்து அந்த ஸ்தலம் தண்டீஸ்வரர் என்று ஊர்மக்களால் வணங்கப்பட்டு வரப்படுகிறது.