Screen Reader Access     A-AA+
அருள்மிகு கருப்பணசுவாமி திருக்கோயில், Maranadu - 630610, சிவகங்கை .
Arulmigu Karuppanasamy Temple, Maranadu - 630610, Sivagangai District [TM035706]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயிலில் உள்ள கருப்பன் மலையாள நாட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மலையாள நாட்டில் இருந்த கருப்பணசாமிக்கு பூசாரி ஒருவர் தினமும் பூஜை வைக்கும் போது ஒருநாள் தனது குழந்தையை கோயிலுக்கு கூட்டி சென்றார். பூஜை முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது தனது குழந்தையை மறந்து விட்டார். பதறிப்போய் தனது குழந்தையை தேடி கோயிலுக்கு போன போது குழந்தை கருப்பணசாமியுடன் விளையாடிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றார். தனது குழந்தை குடுக்குமாறு கருப்பணசாமியிடம் வேண்டினார். கருப்பணசாமி கோபமுற்று குழந்தையை தூக்கி வீசினார். இதனால் பூசாரி கோபம் கொண்டு கருப்பணசாமிக்கு இனிமேல் பூஜை வைக்காமல் விட்டு விட்டார். பூசாரி ஆத்திரம் தீராமல் கருப்பணசாமியை பெட்டிக்குள் அடைத்துஆற்றில் தூக்கி எறிந்து விட்டார். அப்போது ஏற்ப்பட்ட வெள்ளத்தால் அந்த...