அருள்மிகு ஆழிமணிகண்டேஸ்வரர் திருக்கோயில், Idaikattur - 630602, சிவகங்கை .
Arulmigu Alimanikandeswarar Temple, Idaikattur - 630602, Sivagangai District [TM035707]
×
Temple History
தல பெருமை
பண்டைய பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்து பெருமை கொண்டதும், பதினெண் சித்தர்களில் ஒருவராகிய இடைக்காடர் பிறந்து வாழ்ந்த புண்ணிய பூமி இடைக்காட்டூர் எனப்பட்டது. இத்திருக்கோயில் சுவாமியின் பெயர் அருள்மிகு செளந்தரநாயகியம்மன் சமேத அருள்மிகு ஆழிமணிகண்டேஸ்வரர் திருக்கோயிலாகும். இடைக்காட்டூர் என்று இன்று அழைக்கப்படும் இந்த ஊர் சித்தர் காலத்திற்கு முன்பு அழகிய பாண்டிய நல்லூர் எனும் பெயர் பெற்று விளங்கியது. இடைகாட்டூர் சித்தர் புரட்டாசி மாதம் திருவாதிரை நாளில் பிறந்தார் என்றும், 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறுவர்.சித்தர் சிறு வயதில் ஆடு மேய்க்கும் போது கடும் வெயில் காரணமாக மர நிழலில் ஓய்வு எடுத்த போது அங்கு வந்த சித்தர் ஒருவர் அன்பு கொண்டு அவருக்கு தீட்சை கொடுத்ததாகவும், அன்றிலிருந்தே கடவுள் நிலை...பண்டைய பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்து பெருமை கொண்டதும், பதினெண் சித்தர்களில் ஒருவராகிய இடைக்காடர் பிறந்து வாழ்ந்த புண்ணிய பூமி இடைக்காட்டூர் எனப்பட்டது. இத்திருக்கோயில் சுவாமியின் பெயர் அருள்மிகு செளந்தரநாயகியம்மன் சமேத அருள்மிகு ஆழிமணிகண்டேஸ்வரர் திருக்கோயிலாகும். இடைக்காட்டூர் என்று இன்று அழைக்கப்படும் இந்த ஊர் சித்தர் காலத்திற்கு முன்பு அழகிய பாண்டிய நல்லூர் எனும் பெயர் பெற்று விளங்கியது. இடைகாட்டூர் சித்தர் புரட்டாசி மாதம் திருவாதிரை நாளில் பிறந்தார் என்றும், 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறுவர்.சித்தர் சிறு வயதில் ஆடு மேய்க்கும் போது கடும் வெயில் காரணமாக மர நிழலில் ஓய்வு எடுத்த போது அங்கு வந்த சித்தர் ஒருவர் அன்பு கொண்டு அவருக்கு தீட்சை கொடுத்ததாகவும், அன்றிலிருந்தே கடவுள் நிலை அடைந்து இடைக்காடர் எனும் சித்தர் ஆனதாகவும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் நாடு கடும் வறட்சி ஏற்ப்பட்ட போது மற்ற உயிரினங்கள் அழிந்த போது தனது ஆடுகளை வறட்சியிலிருந்து காப்பாற்றியதாக கூறப்படுகிறது. நவகிரகத்தார் மானிட உருவமெடுத்து அவரது குடிசைக்கு வந்த போது அவர்களை இன்முகத்தோடு வரவேற்று நல் விருந்து படைத்ததாகவும், உண்ட மயக்கத்தில் நவகிரகத்தார் உறக்கம் கொண்ட போது அவர்களை அடையாளம் கண்ட இடைக்காடர் வறட்சியை போக்க அவர்கள் படுத்த திசை மாற்றி உறங்க செய்து விட்டார். உடனே எல்லா இடங்களிலும் மழை பெய்ய தொடங்கியது. அயர்ச்சி நீங்கிய நவகிரகத்தார் நடந்ததை உணர்ந்து இடைக்காடரை வணங்கி சென்றனர். இத்திருத்தலத்தில் நவகிரகங்களை திசைப்படி மாற்றி அமைத்த இடைக்காடர் சித்தருக்கும் திருக்கோயில் வடக்கே ஈசானிய மூலையில் தனி கோயில் அமைந்துள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இவர் இயற்றிய நூல்கள் மூவடி முப்பது, ஊசி முறி, இடைக்காட்டூர் சித்தர் ஞான சூத்திரம், இடைக்காட்டார் பஞ்சாங்க வெண்பா ஆகியன.