Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொப்புடையநாயகியம்மன் திருக்கோயில், Karaikudi - 630001, சிவகங்கை .
Arulmigu Koppudayanayaki Amman Temple, Karaikudi - 630001, Sivagangai District [TM035719]
×
Temple History

தல வரலாறு

தமிழ் கூறும் நல்லுலகில் பண்டைப்பெருமை கொண்ட பாண்டிய நாட்டின் கிழக்கு பகுதியில் காரைக்குடி அமைந்துள்ளது. சங்கம் ஏற்படுத்தி மொழி வளர்த்திட்ட பாண்டிய நாடு இறை வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்றது, இதன் காரணத்தாலேயே பெரியோர்கள் முழு முதல் தெய்வத்தை குறிப்பிடும் போது, `தென்பாண்டி நாட்டார்கள்` தென்னாடுடைய சிவன் என்ற சொற்களால் குறிப்பிட்டனர், பாண்டிய நாட்டிற்கு :`கன்னிநாடு` என்ற பெயரும் உண்டு, பாண்டிய மன்னர்கள் வேப்பமாலையை அணிந்திருந்தனர், உலக முழுவதையும் படைத்து காத்தருளும் அன்னையையும் `கன்னி` என்ற சொல்லாலேயே வழங்குதல் நமது தமிழ் மரபாகும் (பவன் பிரமச்சாரி. பாண் மொழி கன்னியாமே என்பது சிவஞ்னா சித்தியார்) மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற சித்தர் பெருமக்களும் அன்னை வடிவத்தை `கன்னி`...