Screen Reader Access     A-AA+
Arulmigu Kattamman Temple, Karaikudi - 630001, சிவகங்கை .
Arulmigu Kattamman Temple, Karaikudi - 630001, Sivagangai District [TM035720]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் காரைக்குடி நகரின் தென்மேற்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள பகுதி பழைய செஞ்சை சங்கராபுரம் என்றும் வழங்கப்படும் காட்டுப்பகுதியாகும். இத்திருக்கோயிலில் உள்ள அன்னை அருள்மிகு காட்டம்மன் என அழைக்கப்படுகிறாள், காட்டுப் பகுதியில் குடிகொண்ட அம்மன் காட்டம்மன், இத்தலத்தையே கொப்புடையம்மனின் மூலஸ்தானம் எனக்கூறுவாருமுண்டு. இதற்கு செஞ்சல நாச்சியம்மன் என்றொரு பெயருமுள்ளது. இத்திருக்கோயில் சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டதெனவும், காரைக்குடி அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோயிலுக்கு இது காலத்தால் முந்தியது எனவும் கூறப்படுகிறது. இங்கு காட்டம்மன் கிழக்கு நோக்கிய நின்ற/அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இத்திருக்கோயிலுக்கேன தனியே உற்சவத் திருமேனி கிடையாது. மூலஸ்தானத்தில் உள்ள அன்னைக்கு எட்டுத்திருக்கைகள் உள்ளது. இது மகிஷாசுரமர்த்தினி கோலம் என்று...