அருள்மிகு முத்துவடுகநாதசுவாமி திருக்கோயில், Singampunari - 630502, சிவகங்கை .
Arulmigu Muthuvadukanatha Swamy Temple, Singampunari - 630502, Sivagangai District [TM035727]
×
Temple History
தல பெருமை
கிபி.1737ல் இராமநாதபுரம் செம்பி நாட்டு முதலூர் பூவலத்தேவர் – குமராயி அம்மாள் தம்பதிகளுக்கு அவதரித்த பெருமகனார் தான் அருள்மிகு முத்துவடுகநாதர். இளமையில் மதுரை பாலமேடு, அழகர்கோயில் பழமுதிர்சோலை, மேலூர் ஆலம்பட்டி முதலான ஊர்களில் வசித்து சிங்கம்புணரியை வாழும் இடமாகக் கொண்டு அற்புதங்கள் பலவற்றை சாதித்த பெருமகனார், நல்ல சொற்களையே நாளும் பயில அன்னை வராகதேவியின் திருவருள் பெற்ற பெருமகன், மக்களால் உயர்ந்த உபதேசம் தரும் “வாத்தியாராக பெயர் வழங்கி சிறப்புப் பெற்றார்.
உயர்ந்த இறைமையை தம் வாழ்வில் பெற்று செயற்கரிய செயல்களை, மானிடத்திற்கு அப்பாற்பட்ட செயல்களாக மந்திரம், தந்திரம், மருத்துவம், என பல் வழிகளிலும் மானிட சமுதாயத்திற்கு நம்பிகையான புகலிடமாக வாழ்ந்தார், இல்லறத்திலே நல்லறம் புரிந்தார். மக்களை ஏமாற்றிய தந்திர வேலைகள், பீதாம்பரியம்...கிபி.1737ல் இராமநாதபுரம் செம்பி நாட்டு முதலூர் பூவலத்தேவர் – குமராயி அம்மாள் தம்பதிகளுக்கு அவதரித்த பெருமகனார் தான் அருள்மிகு முத்துவடுகநாதர். இளமையில் மதுரை பாலமேடு, அழகர்கோயில் பழமுதிர்சோலை, மேலூர் ஆலம்பட்டி முதலான ஊர்களில் வசித்து சிங்கம்புணரியை வாழும் இடமாகக் கொண்டு அற்புதங்கள் பலவற்றை சாதித்த பெருமகனார், நல்ல சொற்களையே நாளும் பயில அன்னை வராகதேவியின் திருவருள் பெற்ற பெருமகன், மக்களால் உயர்ந்த உபதேசம் தரும் “வாத்தியாராக பெயர் வழங்கி சிறப்புப் பெற்றார்.
உயர்ந்த இறைமையை தம் வாழ்வில் பெற்று செயற்கரிய செயல்களை, மானிடத்திற்கு அப்பாற்பட்ட செயல்களாக மந்திரம், தந்திரம், மருத்துவம், என பல் வழிகளிலும் மானிட சமுதாயத்திற்கு நம்பிகையான புகலிடமாக வாழ்ந்தார், இல்லறத்திலே நல்லறம் புரிந்தார். மக்களை ஏமாற்றிய தந்திர வேலைகள், பீதாம்பரியம் ஆகியவற்றை தனது தெய்வீக நிலையில் விரட்டினார். அன்னை வராகி வழிபாட்டில் மேன்மை அடைந்தார். சித்த சொருபமாக தன்னுடைய திருமேனியால் தானே விக்கிரகம் அமைக்கச் செய்து தன் சக்திகளை சிலா விக்கிரகத்தில் ஏற்றம் பெறச் செய்தார்,