Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாச்சியார்(ஆண்டாள்) திருக்கோயில், திருவில்லிபுத்தூர் - 626125, விருதுநகர் .
Arulmigu Nachiyar (Aandal) Temple, Srivilliputhur - 626125, Virudhunagar District [TM035740]
×
Temple History

தல வரலாறு

பகவான் வியாச முனிவர் எழுதிய பதினெட்டு புராணங்களில் ஸ்ரீவராஹபுராணம் பல சேத்திரங்களின் பெருமைகளைக் கூறுகிறது. அப்புராணத்தில் நடுவிலே ஒன்பது அத்யாயங்களில் மிகவும் அழகாக ஸ்ரீதன்விநவ்யபுரம் என்னும் ஸ்ரீவராக சேத்திர மஹாத்மீயம் என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தலபுராணம் அமைந்துள்ளது. ஒரு சமயம் ஸெளனகாதி மகரிஷிகள் நைமிசாரண்யம் என்கிற உயர்ந்த சேத்திரத்திலே யாகம் நடத்தினார்கள். அப்பொழுது அங்கு வந்த சூதபௌராணிகர் என்கிற மகரிஷியிடம் பின்வருமாறு கேட்டார்கள். நீங்கள் பல புண்ய தீர்த்தங்களையும், புண்ய சேத்திரத்தின் பெருமைகளை இப்பொழுது விரிவாக சொல்லியருள வேண்டும் என வேண்டினார்கள். அதற்கு சூதபௌராணிகர் சாதுக்களே ஸ்ரீவராக சேத்திரத்தின் மகிமையை பகவானே ப்ரம்மாவுக்கு உபதேசித்தார். ப்ரம்மதேவன் நாரதமுனிவருக்கும், நாரதமுனிவர் வேதவியாசருக்கும் சொன்னதை அறிந்து உங்களுக்குச் சொல்கிறேன்....

தல பெருமை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடவுள் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கடவுள் விஷ்ணுவின் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகும், கடவுள் விஷ்ணு வடபத்திரசயீ என்ற பெயரை வணங்கப்படுகிறார். லட்சுமி தெய்வம் ஆண்டாள் என்று அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் புனிதமான துளசி செடியின் கீழ் அவதரித்த ஆண்டாள். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை தினந்தோறும் வடபத்ரசாயீ பெருமாளுக்கு சாற்றும் வைபவம் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்துவருகிறது.

இலக்கிய பின்புலம்

பகவான் வியாச முனிவர் எழுதிய பதினெட்டு புராணங்களில் ஸ்ரீவராஹ புராணம் பல க்ஷேத்திரங்களின் பெருமைகளைக் கூறுகிறது. அப்புராணத்தில் நடுவிலே ஒன்பது அத்தியாயங்களில் மிகவும் அழகாக ஸ்ரீதன்விநவ்யபுரம் என்னும் ஸ்ரீவராக க்ஷேத்திர மஹாத்மீயம் என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல புராணம் அமைந்துள்ளது. ஒரு சமயம் ஸெளனகாதி மகரிஷிகள் நைமிசாரண்யம் என்கிற உயர்ந்த க்ஷேத்திரத்திலே யாகம் நடத்தினார்கள். அப்பொழுது அங்கு வந்த சூதபௌராணிகர் என்கிற மகரிஷியிடம் பின்வருமாறு கேட்டார்கள். நீங்கள் பல புண்ணிய தீர்த்தங்களையும், புண்ணிய க்ஷேத்திரத்தின் பெருமைகளை இப்பொழுது விரிவாக சொல்லியருள வேண்டும் என வேண்டினார்கள். அதற்கு சூதபௌராணிகர் சாதுக்களே ஸ்ரீவராக க்ஷேத்திரத்தின் மகிமையை பகவானே ப்ரம்மாவுக்கு உபதேசித்தார். ப்ரம்மதேவன் நாரதமுனிவருக்கும், நாரத முனிவர் வேதவியாசருக்கும் சொன்னதை...