Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாயூரநரதசாமி திருக்கோயில், Pethavanallur, Rajaplayam - 626117, விருதுநகர் .
Arulmigu Mayuranatha Swamy Temple, Pethavanallur, - 626117, Virudhunagar District [TM035744]
×
Temple History

தல வரலாறு

இராஜபாளையம் அருகே தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப்போலவே அவரது மனைவி சிவநேசியும் சிவனையே பூஜித்து வந்தார். நிறை மாத கர்ப்பிணியான அவள் சற்றுத் தொலைவில் குன்றையூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தலைப் பிரசவத்திற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். தற்போது பெத்தவநல்லூர் என்றழைக்கப்படும் இடத்தை நெருங்கிய போது திடீரென்று அவளுக்கு பிரசவ வலி தொடங்கியது. வலி தாங்காமால் இடுப்பை பிடித்தவாறு அம்மா என்று அலறியபடி மயங்கி கீழே விழுந்தாள். அவளது அபயக்குரல் எங்கும் நிறைந்தவரான சிவபெருமானுக்கு கேட்டது அவளது நிலை கண்டு மனமிறங்கி மகேசன் அவளது தயார் கோலத்தில் மருத்துவச்சியாக வடிவெடுத்து வந்து சிவநேசிக்கு உதவினார். பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அவள் தாகத்தால் வருந்தியபோது இறைவன் தன்...