அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளியசுவாமி திருக்கோயில், South Devathanam - 626121, விருதுநகர் .
Arulmigu Nachadai Thavirtaruliya Swamy Temple, South Devathanam - 626121, Virudhunagar District [TM035745]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் தென்பாண்டிய நாட்டு பஞ்சபூத தலங்களில் இத்திருக்கோயில் ஆகாயத்தலமாகும். இத்திருக்கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தொன்மையும், பழமையும் வாய்ந்த திருக்கோயிலாகும். வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரம சோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. இதன் காரணமாக விக்கிரமசோழன், பாண்டிய மன்னன் மீது பல தடவைகள் போர் தொடுத்தும் பாண்டிய மன்னனை வெல்ல முடியவில்லை. பாண்டிய மன்னனை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும் என்று எண்ணி பாண்டிய மன்னனை கொல்ல சதித்திட்டம் தீட்டினான். நட்பின் அடையாளமாக நச்சு கலந்த ஆடையை பாண்டிய மன்னனுக்கு பரிசாக கொடுத்து அனுப்பினான். இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்தான். தனக்கு பரிசாக கொடுத்து அனுப்பிய நச்சு ஆடையை, கொண்டு வந்த சேவுகனுக்கே போர்த்தினான். ஆடையை...இத்திருக்கோயில் தென்பாண்டிய நாட்டு பஞ்சபூத தலங்களில் இத்திருக்கோயில் ஆகாயத்தலமாகும். இத்திருக்கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தொன்மையும், பழமையும் வாய்ந்த திருக்கோயிலாகும். வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரம சோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. இதன் காரணமாக விக்கிரமசோழன், பாண்டிய மன்னன் மீது பல தடவைகள் போர் தொடுத்தும் பாண்டிய மன்னனை வெல்ல முடியவில்லை. பாண்டிய மன்னனை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும் என்று எண்ணி பாண்டிய மன்னனை கொல்ல சதித்திட்டம் தீட்டினான். நட்பின் அடையாளமாக நச்சு கலந்த ஆடையை பாண்டிய மன்னனுக்கு பரிசாக கொடுத்து அனுப்பினான். இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்தான். தனக்கு பரிசாக கொடுத்து அனுப்பிய நச்சு ஆடையை, கொண்டு வந்த சேவுகனுக்கே போர்த்தினான். ஆடையை கொண்டு வந்தவன் எரிந்து சாம்பலானான். சோழ மன்னன் வழங்கிய நச்சு ஆடையை பாண்டிய மன்னன் அணிய விடாமல் தவிர்த்து அருளியதால் சுவாமிக்கு நச்சாடைதவிர்த்தருளியசுவாமி என்று பெயர் பெற்றது