தல வரலாறு

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசிக்கு 3 கிலோ மீட்டர் முன்பாகவே திருத்தங்கல் என்னும் ஆயிரம் ஆண்டுகட்கு முந்தி புகழ் பெற்ற ஊர் உள்ளது சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு சிறிய குன்றின் மேல் பகுதியில் சிவனுக்கு ஆலயமும் மற்றொரு பகுயில் மகாவிஷ்ணுக்கு ஒரு ஆலயமும் முன்னோர்களால் பல நூறுஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டு இன்றும் ஆன்மீக அன்பர்களுக்கு ஓர் அருவியாய் கலையில்நாட்டமுள்ள கலைஞர்களுக்கு அரிய கலைகூடமாக காலத்தால் அழியாத கருங்கல் காவியமாக நிற்கிறது