Screen Reader Access     A-AA+
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகாசி, சிவகாசி நகர் - 626123, விருதுநகர் .
Arulmigu Viswanathaswamy Temple, Sivakasi, Sivakasi - 626123, Virudhunagar District [TM035757]
×
Temple History

தல வரலாறு

பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மன்னர் தென்காசியில் ஒரு சிவாலயம் அமைத்து அதில் காசியில் இருந்து சிவலிங்கத்தைக்கொண்டு வந்து எழுந்தருளச் செய்வதற்கு ஏற்பாடு செய்து காசியில்உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தைகங்கையில் நன்னீராட்டி பலநாள் பயணமாக வரும் வழியில் தற்போது சிவகாசி நகரமும், விஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ள இடம் அப்போது வில்வ வனமாக இருந்தது. அங்கே ஒருநாள் தங்கிச்செல்ல ஏற்பாடு செய்தான். பயணத்துடன் வந்த அரசி பயணம் செய்ய முடியாத சூல்நிலை இருந்ததாலும் சிவலிங்கத்தை சுமந்து வந்த காராம் பசு அவ்விடத்தைவிட்டு நகர மறுத்ததாலும் பயணம் தடைபட்டது. தென்காசி ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்ய வேண்டிய உரோகிணி நன்னாள் வந்துவிடவே காடுகளை களைந்து சிறு ஆலயம் ஒன்றை கட்டி குறிப்பிட்ட சுப வேளையில் சிவகாசியிலேயே...