Screen Reader Access     A-AA+
அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு கிராமம் - 626132, விருதுநகர் .
Arulmigu Kasi Viswanathaswamy Temple, Watrap, Watrap - 626132, Virudhunagar District [TM035773]
×
Temple History

தல பெருமை

வத்திராயிருப்பு அருள்மகு காசிவிஸ்வநாத சுவாமி தருக்கோயில் தொன்மையும் புராதன பழமையும் வாய்ந்த திருக்கோயிலாகும். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு கிராமத்திற்கு தென்புறம் அர்ச்சுனா நதியின் வடக்குப்புற கரையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. கி.பி1625-ல் நாயக்க மன்னர்கள்காலத்தில் ராணி மங்கம்மாள்அந்தணர்களுக்கு தற்போது உள்ள வத்திராயிருப்பு கிராமமாக இருக்கும் இடத்தை தானமாக கொடுத்தார் என்றும் நான்கு வேதம் பாராயணம் செய்யும் அந்தண வேதியர்கள் குடியேறியகாரணத்தால் சாந்தநேரி நத்தத்தில் இருந்த கோயில் பிரித்து வத்திராயிருப்பில் திருக்கோயில் கட்டப்பட்டது எனவும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்