அருள்மிகு சேது நாராயணப் பெருமாள் திருக்கோயில், வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு கிராமம் - 626132, விருதுநகர் .
Arulmigu Sedhunarayanaperumal Temple, Watrap, Watrap - 626132, Virudhunagar District [TM035774]
×
Temple History
தல பெருமை
இத்திருக்கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம் உட்பட அனைத்தும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம் பகுதிகள் ஒரே காலத்தில் உடபீடம், ஜகதி, முப்பட்டைக்கு முதம், கண்டம்,பட்டிகை போன்ற அங்கங்களை கொண்ட அதினத்துடன் அமைந்துள்ளது. சுவர்களில் அதிகம் வேலைப்பாடு இல்லாமல் அதைத்துhண்கள், ஆழமில்லாத வெற்றுக்கோட்டங்கள் அதன் மேல் சாலைவடிவ கூடுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. கூரையிலும் எவ்விதயாளி, கொடுங்கை, பூதவரிவேலைப் பாடுகளும் இன்றி எளிமையாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டுமான அமைப்பைக்கொண்டு இக்கோயில் சுமார் 250 முதல் 300 ஆண்டுகட்குள் கட்டப்பட்டது எனக்கருதலாம்.
விமானம் மூன்றடுக்குச் சுதைச்சிற்பங்களுடன் வேசரவடிவில் சிகரமும், செப்புக்குடத்தாலான ஸ்துhபியும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றுச்சுவர் நன்கு கல்லால் கட்டப்பட்டுள்ளது. முன் வெளிமண்டபம் இரண்டு வரிசைகளில் மூன்று துhண்களுடன் மொத்த ஆறு துhண்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவாயிலில் ஒரு சாலை...இத்திருக்கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம் உட்பட அனைத்தும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம் பகுதிகள் ஒரே காலத்தில் உடபீடம், ஜகதி, முப்பட்டைக்கு முதம், கண்டம்,பட்டிகை போன்ற அங்கங்களை கொண்ட அதினத்துடன் அமைந்துள்ளது. சுவர்களில் அதிகம் வேலைப்பாடு இல்லாமல் அதைத்துhண்கள், ஆழமில்லாத வெற்றுக்கோட்டங்கள் அதன் மேல் சாலைவடிவ கூடுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. கூரையிலும் எவ்விதயாளி, கொடுங்கை, பூதவரிவேலைப் பாடுகளும் இன்றி எளிமையாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டுமான அமைப்பைக்கொண்டு இக்கோயில் சுமார் 250 முதல் 300 ஆண்டுகட்குள் கட்டப்பட்டது எனக்கருதலாம்.
விமானம் மூன்றடுக்குச் சுதைச்சிற்பங்களுடன் வேசரவடிவில் சிகரமும், செப்புக்குடத்தாலான ஸ்துhபியும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றுச்சுவர் நன்கு கல்லால் கட்டப்பட்டுள்ளது. முன் வெளிமண்டபம் இரண்டு வரிசைகளில் மூன்று துhண்களுடன் மொத்த ஆறு துhண்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவாயிலில் ஒரு சாலை கோபுரம் கட்டப்பட்டுள்ளது.