அருள்மிகு பெரியமாரியம்மன் திருக்கோயில், திருவில்லிபுத்துர், திருவில்லிபுத்துர் நகர் - 626125, விருதுநகர் .
Arulmigu Periyamariamman Temple, Srivilliputur, Srivilliputur - 626125, Virudhunagar District [TM035776]
×
Temple History
தல பெருமை
மனிதனின் தொடக்கால வழிபாட்டு முறையில் தாய்தெய்வ வழிபாட்டு முறையே முதன்மையானதாகும். மனித சமூகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றத்தின் காரணமாக சமூகத்தில் பல்வேறு குழுக்களும்,அக்குழுவிற்குள் முரண்பட்ட பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளும் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக வாழ்க்கை நெறிமுறைகளைப் போதிக்கும் பல்வேறு மதங்களும் தோன்றின. ஆசீவகம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம் போன்ற மதங்களின் தோற்றத்திற்குப்பின் முதன்மையானதாக விளங்கிய தாய்தெய்வ வழிபாடு பின்னுக்கு தள்ளப்பட்டு சாதாரண எளிய மக்களின் வழிபாட்டு தெய்வமாக தாய்தெற்வம் மாற்றம் பெற்றது. அத்தாய் தெய்வத்தை பிற்காலத்தில் பரமேஸ்வரி அங்காளம்மன், காளியம்மன், பிடாரியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் என்று பல பெயர்களில் அழைத்து வழிபட்டனர். ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் பல புராண கதைகளும், வரலாற்றுத் தலங்களும் உள்ளடங்கியிருக்கிறது. இங்குள்ள மாரியம்மன் காளியம்மன் வடிவமாய் காட்சியளிப்பதும்,...மனிதனின் தொடக்கால வழிபாட்டு முறையில் தாய்தெய்வ வழிபாட்டு முறையே முதன்மையானதாகும். மனித சமூகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றத்தின் காரணமாக சமூகத்தில் பல்வேறு குழுக்களும்,அக்குழுவிற்குள் முரண்பட்ட பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளும் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக வாழ்க்கை நெறிமுறைகளைப் போதிக்கும் பல்வேறு மதங்களும் தோன்றின. ஆசீவகம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம் போன்ற மதங்களின் தோற்றத்திற்குப்பின் முதன்மையானதாக விளங்கிய தாய்தெய்வ வழிபாடு பின்னுக்கு தள்ளப்பட்டு சாதாரண எளிய மக்களின் வழிபாட்டு தெய்வமாக தாய்தெற்வம் மாற்றம் பெற்றது. அத்தாய் தெய்வத்தை பிற்காலத்தில் பரமேஸ்வரி அங்காளம்மன், காளியம்மன், பிடாரியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் என்று பல பெயர்களில் அழைத்து வழிபட்டனர். ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் பல புராண கதைகளும், வரலாற்றுத் தலங்களும் உள்ளடங்கியிருக்கிறது. இங்குள்ள மாரியம்மன் காளியம்மன் வடிவமாய் காட்சியளிப்பதும், கருவறை பிரஸ்தரப் பகுதியில் காணப்படும் கொடுங்கை வரிகளும் , கருவறை சுவர்ப்பகுதியில் காணப்படும் சிம்மமுக கர்ணகூடுகளும், வசந்த மண்டப விதானத்தில் காணப்படும் மீன் உருவங்களும், கருவறை, இடைகட்டு, அர்த்த மண்டபம் என்ற முறையாக கோயில் கட்டுமான அமைப்பும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் கட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. வசந்த மண்டபத்தின் விதானப் பகுதியில் காணப்படும் மீன் உருவங்களையும், கருவறை, அர்த்த மண்டப கட்டிட அமைப்பு முறையையும் கொண்டு பார்த்தால் இக்கோயில் கி.பி.13-ம் நுற்றாண்டின் இறுதிப்பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அறிக்கையின்படி தெரிய வருகிறது.