அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில், Nainarkovil - 623705, இராமநாதபுரம் .
Arulmigu Naganathaswamy Temple, Nainarkovil - 623705, Ramanathapuram District [TM035924]
×
Temple History
தல வரலாறு
--
தல பெருமை
வருநாம தேவர் கீதம் கேட்க மேற்கு முகமாய் லிங்கம் திரும்பியது.
முல்லா மகளை வாய் பேச வைத்தது.
வேடருக்கு மோட்சம் கொடுத்தது.
பிரார்த்தனை ஸதலம்.வருநாம தேவர் கீதம் கேட்க மேற்கு முகமாய் லிங்கம் திரும்பியது.
முல்லா மகளை வாய் பேச வைத்தது.
வேடருக்கு மோட்சம் கொடுத்தது.
பிரார்த்தனை ஸதலம்.
புராண பின்புலம்
இத்தலம் தென்னாட்டிற் சிறந்த செந்தமிழ்ச் சேது நாடாகிய இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த பழமையும், பெருமையும் வாய்ந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். இது இராமநாதபுரம் நகரிலிருந்து வடமேற்கில் 28 கி.மீ. தொலைவிலும், பரமக்குடி நகரிலிருந்து வட கிழக்கில் 12 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள நாகலிங்கப் பெருமான் சன்னதி மேற்கு முகமாக அமைந்துள்ளது. இது நாம தேவர் கீதம் கேட்க சுவாமி மேற்கு முகமாகத் திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வரலாற்றை பக்த விஜயமென்னும் நூலில் காணலாம்.
இத்தலத்திற்கு மற்றைய சிவஸ்தலங்களுக்கில்லாத தனிப்பட்ட மகத்துவம் என்னவென்றால் தென்னாட்டில் முகமதிய ஆதிக்கம் உச்சத்திலிருந்த காலத்தில் முல்லா சாகிப் தன் ஊமைப் பெண்ணோடு இத்தலத்திற்கு வந்து சந்நிதி முன் நின்ற சமயம் நாகலிங்கப் பெருமான் திருவருளால் முல்லா சாகிப் மகள் வாய்...இத்தலம் தென்னாட்டிற் சிறந்த செந்தமிழ்ச் சேது நாடாகிய இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த பழமையும், பெருமையும் வாய்ந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். இது இராமநாதபுரம் நகரிலிருந்து வடமேற்கில் 28 கி.மீ. தொலைவிலும், பரமக்குடி நகரிலிருந்து வட கிழக்கில் 12 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள நாகலிங்கப் பெருமான் சன்னதி மேற்கு முகமாக அமைந்துள்ளது. இது நாம தேவர் கீதம் கேட்க சுவாமி மேற்கு முகமாகத் திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வரலாற்றை பக்த விஜயமென்னும் நூலில் காணலாம்.
இத்தலத்திற்கு மற்றைய சிவஸ்தலங்களுக்கில்லாத தனிப்பட்ட மகத்துவம் என்னவென்றால் தென்னாட்டில் முகமதிய ஆதிக்கம் உச்சத்திலிருந்த காலத்தில் முல்லா சாகிப் தன் ஊமைப் பெண்ணோடு இத்தலத்திற்கு வந்து சந்நிதி முன் நின்ற சமயம் நாகலிங்கப் பெருமான் திருவருளால் முல்லா சாகிப் மகள் வாய் பேசியதாகவும், அதனால் முல்லா சாகிப் பெருமிதங்கொண்டு பெருமானை
நீரே நயினார் நிசந்தெரிந்தேன்
என்று போற்றிப் பூசித்த காரணத்தால் அன்று முதல் நாகநாதர் கோயில் நயினார்கோயில் என்று வழங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.