இலக்கிய பின்புலம்
அருள்மிகு தேவி பொன்னியம்மன் திருக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் கருவறையில் மூலவர் பொன்னியம்மன் வடக்கு நோக்கி உள்ளார். கருவறையின் எதிரில் பலி பீடம் மற்றும் திரிசூலம் உள்ளது. மேலும் கோயிலின் வடமேற்கில் சப்த கன்னியர் சன்னதி உள்ளது. தேவ கோஷ்டத்தில் சிற்பங்கள் எதுவும் இல்லை. தேவி பொன்னியம்மன் கோயில் விமானம் இரண்டு தளங்கள் மற்றும் வேசர சிகரம் கொண்டு அமைந்துள்ளது. மேலும் கோயிலின் கோபுரம் மூன்று தளங்கள் கொண்ட திராவிட பாணியில் அமைந்த கோபுரம் ஆகும். தேவி பொன்னியம்மன் கோயில் கோபுரத்தின் வெளியே எட்டு தூண்கள் கொண்ட வெளி மண்டபம் உள்ளது.