Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்திவிநாயகர் திருக்கோயில், Tirunelveli Town - 627006, திருநெல்வேலி .
Arulmigu Santhivinayagar Temple, Tirunelveli Town - 627006, Tirunelveli District [TM037887]
×
Temple History

தல பெருமை

வரலாறு-தலபுராணம் திருக்கயிலையில் சிவபிரான் உமையாளைத் திருமணம் புரியும் சமயம் அக்காட்சியைக்காண அனைத்து உலகத்தவரும் அங்கு கூடினர்.அதனால் வடபகுதி உயர்ந்து சமன் இலாது இருந்தது.அப்போது சிவபிரான் ஏழு முனிவர்களில் ஒருவரான அகத்தியரை அழைத்து தென்திசை சென்று உலகை சமன் செய்யும்படி கூறினார்.அகத்தியர் மனம் வருந்தி திருமண காட்சி காண வேண்டும் என்று விண்ணப்பித்தார்.அதற்கு சிவபிரான் மணக்காட்சியை தென் பொதிகையில் அளிப்பதாகக் கூறினார்.அதனை ஏற்று அகத்தியர் தென் திசைக்கு பயணமானார்.அப்படி வரும்போது சிவபெருமள் அருளால் தமிழ் அறிந்து தமிழ் மணக்கும் தென் திசைக்கு வந்தார். அகத்தியர் கடலை அங்கையில் வாரி உண்டு உமிழ்ந்தார்.பொய் உடல் கொண்ட வாதாவியின் காயத்தை உண்டார்.விந்த மலையை தம் குறுங்கையில் அடக்கி அழுத்தியவர் குண்டிகையில் காவிரியை கொண்டு வந்தவர்,...