திருக்கோவில் -ல் அம்மன் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் ஏழைதான். ஆனால் பக்தியில் பணக்காரர். அவர் நாடெங்கும் உள்ள அம்மன் கோயில்களுக்கெல்லாம் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் நெல்லை முதல் காசி வரை எந்த ஊரில் அம்மன் கோவில் இருந்தாலும் அங்கே ஒரு நாள் தங்கி நீராடி இருக்கும் ஒரு செட் துணியை துவைத்தும் காயவைத்தும் அணிந்து அம்மனை தரிசித்து அன்னதானமோ பிச்சை எடுத்தோ சாப்பிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பி விடுவார். ஒவ்வொரு அம்மனையும் கண் குளிர தரிசிப்பார். ஆனந்தம் அடைவார். நம்மை போல் அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் வேண்டுவதில்லை அம்மன் தரிசனம் அதுதான் அவருக்கு முக்கியம் இவ்வாறு ஒவ்வொரு...திருக்கோவில் -ல் அம்மன் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் ஏழைதான். ஆனால் பக்தியில் பணக்காரர். அவர் நாடெங்கும் உள்ள அம்மன் கோயில்களுக்கெல்லாம் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் நெல்லை முதல் காசி வரை எந்த ஊரில் அம்மன் கோவில் இருந்தாலும் அங்கே ஒரு நாள் தங்கி நீராடி இருக்கும் ஒரு செட் துணியை துவைத்தும் காயவைத்தும் அணிந்து அம்மனை தரிசித்து அன்னதானமோ பிச்சை எடுத்தோ சாப்பிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பி விடுவார். ஒவ்வொரு அம்மனையும் கண் குளிர தரிசிப்பார். ஆனந்தம் அடைவார். நம்மை போல் அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் வேண்டுவதில்லை அம்மன் தரிசனம் அதுதான் அவருக்கு முக்கியம் இவ்வாறு ஒவ்வொரு ஊராய் சென்று அம்மன்கள் எல்லாவற்றையும் உள்ளம் உருக உபாசித்தார். வருடங்கள் ஓடின பக்தருக்கு முதுமை வந்தது. அவருக்கு மன நிறைவைத் தந்தாள் தேவி அதனால் சந்தோஷமாக ஊருக்குத் திரும்பினார். உடல் நலம் குன்றி முதுமை சேர்ந்தது கண் பார்வை குறைந்தது. இன்னும் கொஞ்ச காலம் அம்மனிடம் எந்தப் பிராத்தனையும் அவர் வைக்கவில்லை கடைசியில் அம்மனே இறங்கி வந்து அவரிடம் கேட்டாள். என்ன வேண்டும்? கேள் என்றாள். பக்தர் புன்னகைத்தார். கை கூப்பினார். தாயே நான் என்ன கேட்பேன் நடக்க முடியவில்லை நான் தினமும் உன்னை வணங்கிப் பழகியவன் நாடெங்கும் உள்ள அத்தனை தேவிகளையும் தரிசித்து விட்டேன் வாழும் காலம் வரை உன்னை வணங்குவதே என் பணி அதனால் நான் இருக்கும் இடத்திலேயே எப்போது நீ எழுந்தருள் வேண்டும். அந்த பாக்கியத்தை தனக்கு தர வேண்டும் என வேண்டினார். அம்மன் புன்னகைத்தாள் உன்னை மெச்சுகிறேன் இதோ அருகில் தாமிரபரணி நதி ஓடுகிறதல்லவா? அந்த நதிக்கரையில் மூன்று அத்திரமரங்கள் ஒன்றாக இருக்குமிடத்தின் எதிரே நீரின் ஆழமான பகுதியில் நான் விக்ரஹ உருவில் உனக்காக காத்திருக்கிறேன் வந்து நீரில் முழ்கி எடுத்துக் கொள் தாயே நான் எப்படி கரை புரண்டு ஓடும் ஆற்றில் இறங்கி....நீ கேட்காமலேயே உனக்கு இளமையைத் தந்துவிட்டேன்.... தேவி மறைந்தாள். பக்தன் மகிழ்ந்தாள்.மறுநாள் அதிகாலை தாமிரபரணி நதிக்கரையில் மூன்று அத்தி மரங்கள் இருக்குமிடத்துக்குச் சென்றார் நதியின் அடியில் தேவி இருந்தாலோ என்னவோ தண்ணீர் உற்சாகத்துடன் பொங்கி நுரை எழுப்ப ஓடிற்று. பக்தர் ஆற்றின் நடுவே நோக்க புயல் வேக நீரிலும் அடித்துச் செல்லாமல் ஓர் எலுமிச்சை பழம் மட்டும் ஒரே இடத்தில் மிதப்பதைக் கண்டார். அந்த இடத்திற்கு நீந்திச் சென்று (அவரையும் வெள்ளம் ஒன்றும் செய்யாமல் வழி விட்டது) தண்ணீரில் மூழ்கி அங்கே.. அங்கே... ஆழத்தில்... அடியில் அன்னை பராசத்தி அம்மனின் விக்ரஹத்தைக் கரைக்குக் கொண்டு வந்து அங்கேயே சின்னதாய் ஒரு கூரை வேய்ந்து அம்பாளைப் பிரதிஷ்டை செய்தார். தாமிரபரணி என்னும் பெரிய ஆற்றில் கிடைத்ததால் அம்மனை பேராத்துச் செல்வி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். சின்னக் கூரையின்கீழ் அமைக்கப்பட்ட ஆலயம் இன்று நல்ல உயரத்தில் பளபளவென பெரிதாக மாறுயிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பதவி பணம், என்று எல்லாம் இருந்தும் சில காலமாக இரவில் தூக்கம் இல்லாமல் இருந்த பிரிடிஷ் துரை குற்றாலத்தில் மூலிகைக் குளியல் செய்தால் உறக்கம் வரும் என்று மருத்துவர் சொன்னதால் சென்னையிலிருந்து கிளம்பி வழியில் நெல்லையில் தங்கினார். உறக்கம் வரவில்லை. விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு கண்களை இருக மூடிக் கொண்டு அவஸ்தையில் நெளிந்தார். ஊரே அமைதியாக இருந்தது. லேசாக நித்திரை வரும் நேரத்தில் டம்டம் என்று சத்தம் கேட்டது. பேராத்துச் செல்வி ஆலயத்தின் இரண்டாம் நாள் கொடை விழா நடக்கிறது. அதன் மங்கள் வாத்தியங்களின் ஓசை தான் அது என்றார். வெகுண்டெழுந்தார் என்னைத் தூங்காவிடாமல் ஓசை எழுப்பும் கோவிலுக்கு இனி கொடை விழாவை கிடையாது. அத்தனை பேரையும் உடனே வெளியேறச் சொல் இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்கிவிடுவேன் என்று பயமுறுத்தினார். முரசு ஒசை நாதஸ்வரம் தவில் ஓசைகள் நின்றது. திருவிழா ஓசை நின்றதும் துரையின் கண் பார்வை பறி போய்விட்டது. பதறிய ஆங்கிலேய துரையிடம் பணியாளன் சொன்னான். பேராத்துச் செல்வி மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் அவளது விழாவை நீங்கள் நிறுத்தியதால் உங்கள் கண் பார்வையைப் பறித்துக் கொண்டாள் என்றாள். அதிகாரி ஓடினாள் அம்மா தாயே என்னை மன்னித்து விடுஏதோ தெரியாமல் சொல்லிவிட்டேன் என் கண் பார்வையைத் திரும்பக் கொடு என்று கெஞ்சினான். அப்போது அசரீரி ஒன்று அவனுக்கு மட்டும் கேட்டது. இந்த ஊரிலேயே இரு எட்டாம் நாள் திருவிழா அன்று அம்மனுக்குப் பொன்னால் கண் மலர் செய்து வைத்து பிரார்த்தனை செய். கண் பார்வை மட்டுமல்ல உனக்கிருக்கும் தூக்கமின்மை நோயும் மறைந்துவிடும். உடனே விழாவை நடத்தச் சொன்னாள். முரசுகளை ஒலிக்கச் சொன்னான். 8ம் நாள் அம்மனின் முன்னாள் வந்து மனமுருகி இறைஞ்சினார். கண்களில் கண்ணீர் மல்க தங்கத்தால் செய்யப்பட்ட கண் உருவத்தை காணிக்கையாகச் செலுத்தினார் அடுத்த விநாடி பிரிட்டிஷ் துரையின் கண் பார்வை மீண்டது. அதுமட்டுமல்லாமல் அன்றிரவு முதல் நன்றாகத் தூங்கவும் ஆரம்பித்தார். அத்தனை சக்தி மிகுந்தவள் பேராத்துச் செல்வி அம்மன். கண் பிரச்சனை இருப்பவர்கள் தேடித் தேடி வந்து இந்த அம்மனை வணங்குகிறார்கள் நலம் பெறுகிறாகள்.
திருமணம் தடைப்பட்டவர்களும், புத்திர தோஷம் உள்ளவர்களும் பேராத்துச் செல்விக்கு செவ்வரளி, பூமாலை சாத்தி மாவிளக்கு ஏற்றி வேண்டிக் கொண்டால் உடனே பலன் கிடைக்கிறது. காசி மன்னின் குஷ்ட நோய் தீர்த்த தலம் இது என்பதால் இங்கே வந்து அம்மனை வழிப்பட்டால் தீராத நோய்களும் தீரும்.
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மனின் அருள் பெற பக்தர்கள் திரளாக வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.