தல பெருமை :
சிவபெருமானின் திருமணம் காண யாவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்திட அதனைச் சமப்படுத்த அகத்தியர் தெற்கே வந்தார். சிவனின் திருமணத்தைக் காண அவர் விரும்பிடவே திருக்குற்றால நகரில் இருக்கும் தம்மை பூஜிக்க திருமணமும் நடனக் காட்சியும் அவருக்கு கிட்டும் எனக் கூறி அருள்புரிந்தார். அதன்படி அகத்திய முனிவர் திருக்குற்றாலம் வந்தார். அங்கே சங்கு வடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. சிவனடியாரான அவர் அக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இவர் இலஞ்சி வந்து சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருளும்படியாக குமாரரை வேண்டினார். குமரப்பெருமானும் அருள் வழங்க, அகத்தியர் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகிலேயே...தல பெருமை :
சிவபெருமானின் திருமணம் காண யாவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்திட அதனைச் சமப்படுத்த அகத்தியர் தெற்கே வந்தார். சிவனின் திருமணத்தைக் காண அவர் விரும்பிடவே திருக்குற்றால நகரில் இருக்கும் தம்மை பூஜிக்க திருமணமும் நடனக் காட்சியும் அவருக்கு கிட்டும் எனக் கூறி அருள்புரிந்தார். அதன்படி அகத்திய முனிவர் திருக்குற்றாலம் வந்தார். அங்கே சங்கு வடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. சிவனடியாரான அவர் அக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இவர் இலஞ்சி வந்து சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருளும்படியாக குமாரரை வேண்டினார். குமரப்பெருமானும் அருள் வழங்க, அகத்தியர் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகிலேயே வெண்மணலை குவித்து பூஜை செய்தார்.அவ்வாறு மணலைக் குவித்து அகத்தியர் பூஜை செய்த லிங்கம் இருவாலுக நாயகர் (பெருமை பொருந்திய அகத்தியரால் வெண்மணல் கொண்டு செய்யப்பட்டவர்) எனும் திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். அதன்பின் அவர் திருக் குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு அரியை அரனாக மாற்றி வணங்கினார்.இவ்வாறு சிவபெருமானை வழிபட அகத்தியருக்கு அருளியவராக இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் திகழ்கிறார்.இத்தலத்தில் இருக்கும் விநாயகர் செண்பகவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இலஞ்சியில் வீற்றிருக்கும் குமாரர் கட்டிளமைக்கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை,அப்பம்,வடை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனின் குமாரரை வணங்கி அருள்பெற்றுச் சென்ற பெருமை பெற்ற தலம். இவரை அருணாகிரியார் தனது திருப்புகழில் வரதராஜப்பெருமான் என்ற சிறப்புப்பெயர் கொண்டு அழைத்து சிறப்பித்துள்ளார்.
தலவரலாறு:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர், துர்வாசமுனிவர், காசிபர், ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்று கூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி ஆராய்ந்தனர்.அப்போது அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா,அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது.கபிலர் உலகம் இல் பொருளே எனக் கூறி தனது கருத்தை வலியுறுத்தினர். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது.ஆகவே உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மை பொருள் யார்? என ஆராய்ந்தனர். அப்போது,கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும்,உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது.அப்போது உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான் இளமைப் பருவமுடையோனாய் அவர்கள் முன்தோன்றினார். அவர் யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம் என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார். அதன்பின் அவரை வணங்கிய மும்முனிவர்கள் இவ்விடத்தில் எழுந்தருளி தமக்கு அருள்புரிந்தது போலவே, இவ்விடத்திலேயே இருந்து வழிபடுவோருக்கு ஞானம் கொடுத்து விரும்பும் வரம் தருதல் வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்ந்த குமாரர் இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.
இறைவன்: வள்ளி தேவசேனாசமேத அருள்மிகு இலஞ்சிக்குமாரர்
இறைவன்: இருவாலுக நாயகர்
இறைவி: இருவாலுக ஈசர்க்கினியாள்
தலவிருட்சம்: மகிழமரம்
தீர்த்தம்: சித்ராநதி
ஆகமம்: மகுடஆகமம்
பூஜைகள்: தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
இத்திருக்கோயில் திருக்குற்றாலத்திற்கும் இலஞ்சி நகருக்கும் இடையில் சித்ரா நதியும் ஐந்தருவியாறும் கலக்குமிடத்தில் கிழக்கே அழகிய சோலையும் வயலும் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. குற்றாலத்துக்கு வடக்கே 1 மைல் தூரத்திலும், இலஞ்சிக்கு தெற்கே 1 மைல் தூரத்திலும், குற்றாலம் செங்கோட்டை சாலையின் கீழ்புறத்திலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அத்துடன் இத்திருக்கோயில் திருக்குற்றாலக் கோயிலுடன் தொடர்புடையது ஆகும். நினைவுக்கெட்டாத காலத்திற்கு முன்பு, கபிலர், காசிபர், துருவாசர் ஆகிய மும்முனிவர்களின் ஐயப்பாட்டை நீக்கி அன்னார்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க இத்தலத்தில் இலஞ்சிக்குமாரராக முருகப் பெருமான் வள்ளி, தேவசேனா சமேதராக எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன், உமா தேவியரின் திருமணங்காண யாவரும் இமயம் சென்ற போது பாரப்பளுவினால் வடதிசை தாழ, தென்திசை உயர்ந்த பொழுது, இதனை சமப்படுத்த சிவபெருமானின் ஆணையை ஏற்றுக் கொண்டு இப்பகுதி வந்த குருமுனியாகிய அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெண்மணலான சிவலிங்கம் இத்திருக்கோயிலில் உள்ளது. இவர் அகத்திய முனிவருக்கு ஞான உபதேசம் அருளினார். குற்றால வைணவ தலத்தை சிவஸ்தலமாக மாற்றிய பெருமையுடையவர்அகத்தியர். இத்திருக்கோயிலில் இலஞ்சிக்குமாரர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை உடையவராவார்.
ஆலயத்தின் சிறப்பு :
திருமண வைபவத்திற்கு பிரசித்தி பெற்ற திருக்கோயிலாக விளங்குகிறது. ஆண்டொன்றுக்கு 400 திருமணங்கள் வரை நடைபெறுகின்றது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள குமரன் பண்டைக் காலத்தில் ரிஷி முனிவர்களுக்கு ஐயம் தீர ஞான உபதேசம் செய்த சிறப்பு உடையவர். பிற்காலத்தில் அகத்தியமா முனிவருக்கு உபதேசம் செய்த பெருமையுடையது இத்தலம். இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருள் உண்டு. மேலும், ரிஷிகளின் வேண்டுகோளின்படி இத்தலத்தில் எழுந்தருளி வேண்டுவோர்க்கு ஞானமீய்ந்து, விரும்பும் வரத்தை இன்றும் கொடுத்தருள்கிறார்.