Arulmigu Kodilageshwarat Temple, Pazhaya Papanasam - 627425, திருநெல்வேலி .
Arulmigu Kodilageshwarat Temple, Pazhaya Papanasam - 627425, Tirunelveli District [TM037904]
×
Temple History
தல பெருமை
பா்வதராஜன் பெற்றெடுத்த புதல்வியாகிய பாா்வதி தேவியைச் சிவபிரான் திருமணஞ் செய்து கொள்ளுங்காலத்து தேவா்களும் முனிவா்களும் மற்றையாவரும் இம்மலையின் அருகே ஒன்றுகூடியமையால் பூமியின் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயா்ந்துவிட்டது. அது கண்ட சிவபிரான் அங்கிருந்த அகத்திய முனிவரை நோக்கி, நீா் தென்பால் உள்ள பொதிகை மலைக்குச் சென்று தங்கினால் பூமி சமமாகி விடும். ஆதலின் தென்திசை நோக்க செல்லுக என்ற கட்டளை இட்டாா். உடனே அகத்தியா், பெருமானே யான் தேவசீரது திருமணக்காட்சியை எவ்வாறு காண்பேன் என்று கேட்க, சிவபிரான் பொதிகை மலைச்சாரலில் உள்ள பாவநாச தலத்தில் சித்திரை மாதப் பிறப்பன்று எமது திருமணக்கோலக் காட்சி கொடுத்தருள்வோம் என்று கூறினாா். அவ்வாறே மகத்துவம் மிகுந்த அகத்தியா் தனது மனைவி உலோபமுத்தரையுடன் பொதிகைமலைக்கு வந்து தங்கியதும் பூமி...பா்வதராஜன் பெற்றெடுத்த புதல்வியாகிய பாா்வதி தேவியைச் சிவபிரான் திருமணஞ் செய்து கொள்ளுங்காலத்து தேவா்களும் முனிவா்களும் மற்றையாவரும் இம்மலையின் அருகே ஒன்றுகூடியமையால் பூமியின் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயா்ந்துவிட்டது. அது கண்ட சிவபிரான் அங்கிருந்த அகத்திய முனிவரை நோக்கி, நீா் தென்பால் உள்ள பொதிகை மலைக்குச் சென்று தங்கினால் பூமி சமமாகி விடும். ஆதலின் தென்திசை நோக்க செல்லுக என்ற கட்டளை இட்டாா். உடனே அகத்தியா், பெருமானே யான் தேவசீரது திருமணக்காட்சியை எவ்வாறு காண்பேன் என்று கேட்க, சிவபிரான் பொதிகை மலைச்சாரலில் உள்ள பாவநாச தலத்தில் சித்திரை மாதப் பிறப்பன்று எமது திருமணக்கோலக் காட்சி கொடுத்தருள்வோம் என்று கூறினாா். அவ்வாறே மகத்துவம் மிகுந்த அகத்தியா் தனது மனைவி உலோபமுத்தரையுடன் பொதிகைமலைக்கு வந்து தங்கியதும் பூமி சமமாயிற்று. இறைவன் திருமணக்கோலக் காட்சியை பாவநாச தலத்திலேயே கண்டுமகிழ்ந்தனா்.