Screen Reader Access     A-AA+
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில், Bus Stop, Ambasamudram - 627401, திருநெல்வேலி .
Arulmigu Agastheeswarar Temple, Bus Stop, Ambasamudram - 627401, Tirunelveli District [TM037926]
×
Temple History

தல பெருமை

திருக்கயிலை மலையில் சிவபெருமான் திருமணக் காட்சியை காண முனிவர்கள், தேவர்கள், தவ போதகர்கள் கூடினர். அதனால் பூமியின் வடபாகம் தாழ்ந்து தென்பாகம் உயர்ந்த்து. அதை சமன் செய்ய சிவபெருமான் கருணையினால் அகத்தியர் தென்பாகம் போகத் துணிந்தார். வரும் வழியில் விந்திய மலையின் கர்வம் அடக்கி, வாதாபி வில்லவனை வதம்செய்து, காவிரியை விடுவித்து, குற்றாலம், பாபநாசம் வந்து திருமூலநாதரின் திருமணக் காட்சி கண்டு இன்புற்று பூமியை சமன் செய்தார். அம்பை செங்குந்தர் வீதி சிங்காதன குறடு புளிய மரத்தடியில் அமர்ந்து செங்குந்த சான்றோர்களிடம் அமுது கேட்க, அவர்கள் கொட்டு வரும்முன் மறைந்தருளினார். அவர்கள் வருந்து துதிக்க, பங்குனி மாதம் 29-ம் நாள் வேடர் வடிவில் வந்து நீங்கள் தரும் அமுதை அருந்துவோம். அதன் அறிகுறியாக அடிச்சுவடும்,...