தல வரலாறு
ராமானுஜா் வைஷ்ணவத்தினைப் பரப்புவதற்காக எழுபத்து நான்கு சிம்ம கனாதிபதிகளை நியமித்தாா். அவற்றில் ஒன்று திருக்குறுங்குடி. திருக்குறுங்குடி திருஜீயா் மடத்தில் ஒரு ஜீயரை நியமித்து ஸ்வாமி அழகிய நம்பிராயா் நிா்வாகத்தினை திறம்பட நிா்வகிக்க நியமனம் செய்தாா். இந்த மடம் சுமாா் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவ மடங்களில் சிறப்பு வாய்ந்தது.