அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில், Palayamkottai - 627002, திருநெல்வேலி .
Arulmigu Thiripurantheeswarar Temple, Palayamkottai - 627002, Tirunelveli District [TM037936]
×
Temple History
தல பெருமை
பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை உத்தாலன் எனும் திருநாமம் உடையவேந்தன் சீரும் சிறப்புமாய் ஆட்சி நடத்தி வந்தான்.ஒரு நாள் உப்பரிகையில் தனது தேவியோடு உலாவும் போது வழியில் சென்று கொண்டிருந்த தவமுனிவர் ஒருவரை அகந்தை மிகுதியால் கேலிப் பொருள் ஆக்கினான். வெகுண்ட தவமுனிவர் சபிக்க மன்னனின் அங்கம் உருகுலைந்து அவலநிலை அடைந்தது.கண்கள் காட்சியை இழந்தது.மனம் வருந்தி மன்னன் தன் பழைய நிலையை நினைத்து பலவாறு வருந்தி,முனிவரை வேண்டினான்.தவமுனிவர் அவனது வேண்டுகோளுக்கு இரங்கி பொருநை நதிக் கரையில் செண்பக வனத்தில் சிவலிங்கம் அமைத்து பூஜை செஉதால் இழந்த வனப்பை மீண்டும் பெறலாம் என விமோசனம் தந்தார். தன் துயர் துடைக்க மன்னன் கெளதம முனிவரை வேண்டினான்.தாமிரபரணியில் கரையில் ஈசனை வழிபட்டு மன்னன் தனது இழந்த...பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை உத்தாலன் எனும் திருநாமம் உடையவேந்தன் சீரும் சிறப்புமாய் ஆட்சி நடத்தி வந்தான்.ஒரு நாள் உப்பரிகையில் தனது தேவியோடு உலாவும் போது வழியில் சென்று கொண்டிருந்த தவமுனிவர் ஒருவரை அகந்தை மிகுதியால் கேலிப் பொருள் ஆக்கினான். வெகுண்ட தவமுனிவர் சபிக்க மன்னனின் அங்கம் உருகுலைந்து அவலநிலை அடைந்தது.கண்கள் காட்சியை இழந்தது.மனம் வருந்தி மன்னன் தன் பழைய நிலையை நினைத்து பலவாறு வருந்தி,முனிவரை வேண்டினான்.தவமுனிவர் அவனது வேண்டுகோளுக்கு இரங்கி பொருநை நதிக் கரையில் செண்பக வனத்தில் சிவலிங்கம் அமைத்து பூஜை செஉதால் இழந்த வனப்பை மீண்டும் பெறலாம் என விமோசனம் தந்தார். தன் துயர் துடைக்க மன்னன் கெளதம முனிவரை வேண்டினான்.தாமிரபரணியில் கரையில் ஈசனை வழிபட்டு மன்னன் தனது இழந்த வனப்பை பெற முடியும் என உணர்ந்த கெளதம முனிவர் பாண்டிய மன்னனையும் பாண்டிமாதேவியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பாளையம்பதிக்கு வந்தார். செண்பக வனத்தின் செழுமை கணட முனிவர் சிவலிங்கம் அமைத்து சிவ பூஜை செய்து சிறப்பிக்க நினைத்தார். வான்வழியே வடதிசை நோக்கிப் பயணித்து கொண்டிருந்த அனுமனை அழைத்து காசிக்கு சென்று சிவபூஜை செய்ய சிவலிங்கம் கொண்டு வருக என கூறினார்.அனுமனும் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வர கெளதம முனிவர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பாண்டிய மன்னனையும் பாண்டிமாதேவியையும் தவமிருக்க செய்து இழந்த தேகப் பொலிவையும,கண்ணொளியையும் பெற்றுத் தந்தார். கெளதம முனிவருக்கு காட்சி தந்த ஈசன் வேண்டும் வரம் யாது எனக் கேட்க கெளதம முனிவரும் இத்தலம் என்றும் சிறப்புற்று இருக்க வேண்டும். இங்கு வந்து உன்னை பூஜிப்பவர்கள் எல்லா நலனும் பெற்று இன்புற்று இருக்க வேண்டும் என வேண்டினார்.இறைவனும் அவ்வாறே ஆகட்டும் என வாழ்த்தி வரம் தந்தார்.