அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், Melathiruvenkatanathapuram - 627006, திருநெல்வேலி .
Arulmigu Venkatachalapathy Temple, Melathiruvenkatanathapuram - 627006, Tirunelveli District [TM037942]
×
Temple History
தல வரலாறு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், மேலத்திருவேங்கடநாதபுரம்,அருள்மிகு வெங்டாசலபதி திருக்கோயில் அமைந்த காட்டுப் பகுதி புராண காலத்தில் சாலிவாடிபுரம் என்றும் வைப்ராச்சியம் என்றும் அழைக்கப்பட்டன. இப்பகுதியில் அமைந்த உயர்ந்த மலைக்குன்றுக்கு சுவேதா மலை என்று பெயர் மகாபாரதம் அருளிய வியாச மாமுனியின் முதன்மை சீடரான பைலர் என்ற ஒரு முனிவர். இப்பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரை ஓரம் அமர்ந்து சீனிவாசப் பெருமாளை மனதில் நினைத்து தவம் செய்தார். அப்போது அங்கு கோயிலோ, பெருமாள் சிலையோ பூஜை செய்ய சிலைகளோ கிடையாது. பைலர் தன் மனத்திற்குள்ளே பெருமாளை ஒரு கோடி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர் ஏழாவது நாள் அர்ச்சனை பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப்பிரகாசமான ஒளியாக...திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், மேலத்திருவேங்கடநாதபுரம்,அருள்மிகு வெங்டாசலபதி திருக்கோயில் அமைந்த காட்டுப் பகுதி புராண காலத்தில் சாலிவாடிபுரம் என்றும் வைப்ராச்சியம் என்றும் அழைக்கப்பட்டன. இப்பகுதியில் அமைந்த உயர்ந்த மலைக்குன்றுக்கு சுவேதா மலை என்று பெயர் மகாபாரதம் அருளிய வியாச மாமுனியின் முதன்மை சீடரான பைலர் என்ற ஒரு முனிவர். இப்பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரை ஓரம் அமர்ந்து சீனிவாசப் பெருமாளை மனதில் நினைத்து தவம் செய்தார். அப்போது அங்கு கோயிலோ, பெருமாள் சிலையோ பூஜை செய்ய சிலைகளோ கிடையாது. பைலர் தன் மனத்திற்குள்ளே பெருமாளை ஒரு கோடி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர் ஏழாவது நாள் அர்ச்சனை பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப்பிரகாசமான ஒளியாக வானத்தில் எழுந்தது. அந்த ஒளி தீபத்திற்குள் சீனிவாசப்பெருமாள் தோன்றினார். அவர் காலடியில் தாமிரபரணி தெய்வத்தையும் பைலர் கண்டார். உடனே பைலர் இந்த இருவரையும் வணங்கி சீனிவாச பெருமாளே உன் ஆனந்த காட்சியை யான் கண்டு உளம் மகிழ்ந்தேன் என்றார் மேலும் வடக்கே வேங்கடமலையான திருப்பதியில் குடிகொண்ட வெங்கடாசலபதி பெருமாளே உன் ஆனந்த காட்சியை யான் கண்டு உளம் மகிழ்ந்தேன் என்றார். மேலும் வடக்கே வேங்கட மலையான திருப்பதியில் குடி கொண்ட வெங்கடாசலபதி பெருமாளே தாங்கள் தங்கள் புடைசூழ எப்போதும் இங்கு இருந்து அருட் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பைலர் திருவேங்கடநாதனை பூதேவி, திருதேவி, மற்றும் அலமேலுமங்கை தம்பதிகளாக இங்கே பிரதிஷ்டை செய்து இந்த திருக்கோயிலை உண்டாக்கினார். பைலர் தவமிருந்த இடமே சீனிவாச தீர்த்த கட்டமாகும்.
தல பெருமை
இத்திருக்கோயில் அமைந்த காட்டுப்பகுதி புராணகாலத்தில் சாலிவாடிபுரம் என்றும் வைப்ராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது. இப்பகுதியில் அமைந்துள்ள உய்ர்ந்த மலைக்குன்றிற்கு சுவேதா மலை என்று பெயர். மகாபாரதம் அருளிய வியாசமுனிவரின் முதன்மை சீடரான பைலர் என்ற ஓரு முனிவர் இப்பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமர்ந்து சீனிவாசபெருமாளை மனதில் நினைத்து ஓருகோடு மலரிடடு அர்ச்சனை செய்து வழிபட ஏழாவது நாள் அர்ச்சனை பூக்கள் ஓன்று சேர்ந்து பிரகாசமான ஓளியாக வானத்தில் தோன்றினார்.அவர் காலடியில் தாமரபரணி தெய்வத்தையும்பைலர் கணடார்உடனே பைலர் இந்த இருவரையும் வணங்கி சீனிவாசபெருமாளே உன் ஆனந்த காட்சியை யான்கண்டு உளம் மகிழ்ந்தேன் என்றார். மேலும் வடக்கு வேங்கடமலையான திருப்பதியில் குடிக கொண்ட வெங்கடாசலபதிபெருமானே ...இத்திருக்கோயில் அமைந்த காட்டுப்பகுதி புராணகாலத்தில் சாலிவாடிபுரம் என்றும் வைப்ராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது. இப்பகுதியில் அமைந்துள்ள உய்ர்ந்த மலைக்குன்றிற்கு சுவேதா மலை என்று பெயர். மகாபாரதம் அருளிய வியாசமுனிவரின் முதன்மை சீடரான பைலர் என்ற ஓரு முனிவர் இப்பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமர்ந்து சீனிவாசபெருமாளை மனதில் நினைத்து ஓருகோடு மலரிடடு அர்ச்சனை செய்து வழிபட ஏழாவது நாள் அர்ச்சனை பூக்கள் ஓன்று சேர்ந்து பிரகாசமான ஓளியாக வானத்தில் தோன்றினார்.அவர் காலடியில் தாமரபரணி தெய்வத்தையும்பைலர் கணடார்உடனே பைலர் இந்த இருவரையும் வணங்கி சீனிவாசபெருமாளே உன் ஆனந்த காட்சியை யான்கண்டு உளம் மகிழ்ந்தேன் என்றார். மேலும் வடக்கு வேங்கடமலையான திருப்பதியில் குடிக கொண்ட வெங்கடாசலபதிபெருமானே தாங்கள் தங்கள் புடைசூழ எப்போதும் இங்கு இருந்து அருட்செய்யவேண்டும் என்று வேணடுகோள் விடுத்தார. அதன்படி பைலர் திருவேங்கடநாதனை பூதேவி திருதேவி மற்றும் அலர்மேலுமங்கை தம்பதிகளாக இங்கே பிரதிஷ்டை செய்து இந்த திருக்கோயிலை உருவாக்கினார். பைலர் தவமிருந்த இடமே சீனிவாச தீர்த்த கட்டமாகும்.
கோயிலும் ஊரும் எழுந்த வரலாறு
பைலர் எழுநதருளிச்செய்த பெருமாளகோயில் சிறுகோயிலாக இருந்தது. அபபோது இப்பகுதியை ஆண்டுவநத மன்னர் வெஙகடப்பநாயக்கர். அவருக்கு குழந்தைப்பேறு இலலாததால் பல திருக்கோயில்களுக்கு சென்று வழிபாட்டு வந்தார். அப்போதுஇங்கு வந்த தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எழுந்ததும் ஓரு அசிரிரீ ஓலி கேட்டது. மன்னா நீ ஆயிரம் குழந்தைகளுக்குகோயிலில் வைத்து அவர்கள் பசியை போக்கினால் உனக்கு குழந்தைபேறு கிடைக்கும் என்று ஓலித்தது. மன்னனும் அவவாறே செய்தான். அவனுக்கு குழந்தைபேறு கிடைத்தது.தன் மகனுக்கு சீனிவாசன் என்று பெயரிட்டான். மன்னர் கோயிலை பெரிதாக கட்டினான். தன் பெயரால் வேங்கடநாதபுரம் என்ற ஊரை கோயிலைச்சுற்றி அமைத்தான்.