தல பெருமை
தாமிரபரணி நதிக்கரையில் அநேக தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றில் நெல்லை குறுக்குத்துறையில் அமைந்தது ஸ்ரீ பத்மநாபதீர்த்தம். இது தாமிரபரணி மஹாத்மியம் என்னும் நூலில் 16,17 அத்யாயங்களில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. ஆதியில் ஸ்ரீ பைல முனிவருக்கு ஸ்ரீ தாமிரபரணி நீருக்குள் நீல ரத்தினமாக தரிசனம் கொடுத்ததினால் நீலமணி நாதன் என்னும் திருநாமம் ஏற்படலாயிற்று. எனவே செந்தமிழில் கரிய மாணிக்கம் என்று வழங்கலாயிற்று. கரி என்பது சனி பகவானையும், மாணிக்கம் என்பது சூரிய பகவானையும் குறிக்கும். எனவே இத்திருக்கோயில் சனி, சூரியன் தோஷங்கள் தீர்க்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. செவிவழி செய்திப்படி ஸ்ரீ கிருஷ்ணவர்ம மஹாராஜாவிற்கு காட்சி கொடுத்து ஆலயம் புதுப்பிக்கப்பட்டதாக வரலாறு.