இந்த தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் சொக்கநாதர். இறைவி மீனாட்சி அம்மன்.
ஆலயத்தின் தல விருட்சம்- வில்வம்.
தீர்த்தம்- பிரம்ம தீர்த்தம்.
பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த பழமைவாய்ந்த திருக்கோவில் இது. மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த அழகிய பாண்டிய மன்னன், மதுரை ஸ்ரீ சொக்கநாதர் சமேத மீனாட்சி அம்மனிடம் ஆழ்ந்த பக்தியும், அன்பும் கொண்டு இருந்தான். தினமும் கோவிலுக்கு சென்று ஸ்ரீ சொக்கநாதரை தரிசனம் செய்த பின்னர்தான் மற்ற பணிகளை தொடர்வான்.
இந்நிலையில் சேரமன்னன் புருஷோத்தமன், பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து திருநெல்வேலி வரை தனது சேரநாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணினான். இதனால் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக தனது படையுடன் புறப்பட்டான். அதனை தனது ஒற்றர் மூலம் தெரிந்து...இந்த தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் சொக்கநாதர். இறைவி மீனாட்சி அம்மன்.
ஆலயத்தின் தல விருட்சம்- வில்வம்.
தீர்த்தம்- பிரம்ம தீர்த்தம்.
பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த பழமைவாய்ந்த திருக்கோவில் இது. மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த அழகிய பாண்டிய மன்னன், மதுரை ஸ்ரீ சொக்கநாதர் சமேத மீனாட்சி அம்மனிடம் ஆழ்ந்த பக்தியும், அன்பும் கொண்டு இருந்தான். தினமும் கோவிலுக்கு சென்று ஸ்ரீ சொக்கநாதரை தரிசனம் செய்த பின்னர்தான் மற்ற பணிகளை தொடர்வான்.
இந்நிலையில் சேரமன்னன் புருஷோத்தமன், பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து திருநெல்வேலி வரை தனது சேரநாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணினான். இதனால் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக தனது படையுடன் புறப்பட்டான். அதனை தனது ஒற்றர் மூலம் தெரிந்து கொண்ட அழகிய பாண்டிய மன்னனும் பெரும்படையை திரட்டி தற்போது பழைய பேட்டை இருக்கும் இடத்தில் முகாமிட்டு தங்கியிருந்தான்.
இத்தலம் அமைந்துள்ள இடத்தில் அழகிய பாண்டிய மன்னனின் ஆஸ்தான குரு சுந்தர முனிவர் ஆசிரமம் அமைத்து ஆலோசனைகள் கூறி வந்தார். ஒருநாள் மன்னன் அழகிய பாண்டியன், தாமிரபரணி நதியில் நீராடி விட்டு மதுரை சொக்கநாத பெருமானை தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். பின்னர் இறைவனை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘சுந்தர முனிவர் ஆசிரமம் அமைந்த வில்வ வனத்தில், ஒரு வில்வ மரத்தின் அடியில் உள்ள எறும்பு மணல் மேட்டில் நான் இருக்கிறேன்’ என்றது அந்த குரல்.
பாண்டிய மன்னன், அந்தக் குரலை இறைவனின் வாக்காகவே எண்ணினான். அசரீரி ஒலித்தபடி, குறிப்பிட்ட இடத்தை தோண்ட செய்து பார்த்தான். அப்போது அங்கு அழகிய சிவலிங்கம் இருப்பதை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தான். இறைவன் கூறியபடி அந்த இடத்தில் ஸ்ரீ சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு ஆலயம் எழுப்பி தினமும் பூஜை செய்து மகிழ்ந்து வந்தான்.
இந்த நிலையில் சேரமன்னன் புருஷோத்தமன், போர் தொடுக்க இதுதான் சமயம் என்று தன்னுடைய படையுடன் அங்கு வந்தான். அப்போது சொக்கநாத பெருமானின் அருளால், பாண்டிய மன்னனின் படைத்தளம் ஆயிரம் மடங்கு பெரிதாக காட்சி தந்ததை கண்டு அச்சமுற்றான். இப்பெரும் படையை வெல்வது கடினம், நாம் இதுவரையில் பார்த்திராத பெரும்படையாக இது உள்ளதே. இது எப்படி சாத்தியம் என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தவன், மாறு வேடத்தில் இங்கு வந்தான்.
அப்போது பாண்டிய மன்னனின் மகள் மனோண் மணியை சந்தித்து காதல் வலையில் விழுந்தான். பின்னர் அவளை மணம் முடிப்பதற்காக நேராக பாண்டியமன்னனிடம் சென்று பெண் கேட்டான். ‘நான் சேர மன்னன் புருஷோத்தமன். உங்களுடன் போரிடுவதற்காக வந்தேன். இறைவன் அருளால் உமது மகள் மீது விருப்பம் கொண்டேன். அவளை எனக்கு திருமணம் முடித்து தர வேண்டுகிறேன்’ என்றான். மனோண்மணியும் சேர மன்னனை விரும்பவே, இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் புருஷோத்தமன், மனோண்மணியை மதுரைக்கு அழைத்து சென்றான் என்பதாக தல வரலாறு கூறப்படுகிறது.
பெரும் போர் தவிர்க்கப்பட்டு திருமணமாக முடிந்த தால் இத்திருத்தலம் திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வதற்கு ஏற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஸ்ரீ கனக விஷ்ணு துர்க்கை, 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த சனி பகவான், பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்து உள்ளது.
இத்திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, திருச்செந்தூரில் இருப்பது போன்று தண்ணீரின் மேல் ஆமை மேருமலையை தாங்க அதன் மேல் தட்சிணாமூர்த்தி, சன்காதி முனிவர்களுடன் அருள்பாலித்து வருகிறார். இதேபோல் இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் புத பகவான் வடக்கு நோக்கி இருப்பது ஆகியவை இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.