Screen Reader Access     A-AA+
அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயில், Manoor - 627201, திருநெல்வேலி .
Arulmigu Ambalavananatha Swami Temple, Manoor - 627201, Tirunelveli District [TM037961]
×
கோயில் வரலாறு

தல வரலாறு

திருக்கோவில் வரலாறு முற்காலத்தில் அம்பலவாண முனிவர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஈசன் மீது அளவிலா பக்தி. அதிலும் ஈசன் ஆடும் திருநடனத்தின் மீது அளவு கடந்த நாட்டம் கொண்டிருந்தார். அவரின் தூய பக்திக்கு இறங்கி, இங்கு சுவாமி நெல்லையப்பர் திருநடன காட்சி காட்டியதாகவும், அந்த திருநடனக் காட்சியுடன் எழுந்தருளியிருக்கும் நடராஜரே, இங்கு முனிவர் பெயரினால் அம்பலவாண சுவாமி என்னும் பெயரில் காட்சியளிக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இந்த கோவிலோடு கருவூர் சித்தருக்கும் வரலாற்று தொடர்பு உள்ளது. கருவூர் சித்தர் சிவ தல யாத்திரை மேற்கொண்ட போது ஒரு முறை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வருகிறார். தான் அழைத்தவுடன் தனக்கு இறைவன் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தினை பெற்றிருந்த கருவூர் சித்தர், திருநெல்வேலி கோவில் வாசல்...