தல வரலாறு
முப்புடாதி அம்பாள் வேத, ஆகம, புராணங்களில் திரிபுரசுந்தரி என போற்றப்படுகின்றாள். (திரி என்றால் மூன்று, புரம் என்றால் திசைகள், வெளி என்றால் சுந்தரி என்றால் பேரழகி, முப்புடாதி அம்பாள் மூன்று முகங்களும், ஆறுகரங்களுடனும் வீற்றிருக்கின்றாள். துர்கா, காளி, பராசக்தி ரூப முகம் கொண்டு குபேர திசை என்னும் வடக்கு நோக்கியும், மகாலெட்சுமி ரூப முகம் கொண்டு இந்திர திசை என்னும் கிழக்கு திசை நோக்கியும் மகா சரஸ்வதி ரூப முகம் கொண்டு வருண திசை என்னும் மேற்கு நோக்கி ஒரு முகமும் கொண்டு, வலது திருக்கரங்களில் சூலம், அங்குசம், கடமும், இடது திருக்கரங்களில் கபாலம், பாசம், கேடயமும் கொண்டு திருவடியில் மகிசாசுரனும் இருக்க பேரழகுடன் அருளாட்சி செய்கிறாள். இந்த அதிசயமான திருவுருவம்,...தல வரலாறு
முப்புடாதி அம்பாள் வேத, ஆகம, புராணங்களில் திரிபுரசுந்தரி என போற்றப்படுகின்றாள். (திரி என்றால் மூன்று, புரம் என்றால் திசைகள், வெளி என்றால் சுந்தரி என்றால் பேரழகி, முப்புடாதி அம்பாள் மூன்று முகங்களும், ஆறுகரங்களுடனும் வீற்றிருக்கின்றாள். துர்கா, காளி, பராசக்தி ரூப முகம் கொண்டு குபேர திசை என்னும் வடக்கு நோக்கியும், மகாலெட்சுமி ரூப முகம் கொண்டு இந்திர திசை என்னும் கிழக்கு திசை நோக்கியும் மகா சரஸ்வதி ரூப முகம் கொண்டு வருண திசை என்னும் மேற்கு நோக்கி ஒரு முகமும் கொண்டு, வலது திருக்கரங்களில் சூலம், அங்குசம், கடமும், இடது திருக்கரங்களில் கபாலம், பாசம், கேடயமும் கொண்டு திருவடியில் மகிசாசுரனும் இருக்க பேரழகுடன் அருளாட்சி செய்கிறாள். இந்த அதிசயமான திருவுருவம், யாம் இருக்கும் இடத்தில் கல்வி, செல்வம், வீரம் இருக்குமென்று பறை சாற்றுகிறது. இப்பிரசித்தி பெற்ற அம்பாள் பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, சிவசக்தி என்னும் மூன்று முகம் கொண்டு முப்புடாதி என நாமம் கொண்டு இத்திருக்கோயிலில் நின்று அருள் பாலிக்கிறாள்.