Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரகலாதீஸ்வரர் திருக்கோயில், Serthamaram - 627857, தென்காசி .
Arulmigu Pragalatheshwarar Temple, Serthamaram - 627857, Tenkasi District [TM037979]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயிலாகும். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும். எல்லாம் வல்ல முழுமுதற் பரம்பொருள் தன் அடியார் மீது கொண்ட அளப்பருங் கருணையினாலே, திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஆலயங்கள் எண்ணற்றன. அத்தகு முறையில், தென்பாண்டி நாட்டில் சேர்ந்தமங்கலத்தில் இரண்யனுடைய மகன் பக்தபிரகலாதன் தன் நிமித்தமாக தன் தந்தை, நரசிங்க மூர்த்தியால் சம்காரிக்கப்பட்டார் என்ற வரலாறு தெரிந்ததே. தகப்பன் இறக்கக் காரணமாக பாவம் ஒழிய பிரகலாதன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை ஆற்றி உய்வுற்றார் என்பது பரம்பரையாக வரும் செய்தி. ஆகையால் சுவாமியின் திருப்பெயரும் பிரகலாததீசுவரர் என விளங்குகிறது. இத்திருக்கோயிலில் நந்திக்கு அபிஷேகம் செய்து...