Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், நரசிங்கநல்லூர் - 627604, திருநெல்வேலி .
Arulmigu Venkatachalapathy Temple, Narasinga Nallur - 627604, Tirunelveli District [TM037986]
×
Temple History

தல பெருமை

விஜயநகர சாம்ராஜ்யத்தின் போது சிற்றரசர்களின் கலகத்தை அடக்க தென்பாண்டி நாட்டுக்கு சாளுவ நரசிம்மன் என்ற மன்னனின் படைத் தளபதியாக வந்தவர் நரசப்ப நாயக்கர். இவர் தாமிரபரணி நதிக்கரையின் அழகைக் கண்டு ரசித்து வரும்போது தன் இஷ்ட தெய்வமான மகாவிஷ்ணுவை தியானித்து, எல்லோருக்கும் படி அளக்கும் பரந்தாமா எனக்கு புத்திரபாக்கியத்தை அருள மாட்டாயா என மன்றாடி வேண்டினார். அப்போது ஆகாயத்தில் அசரீரி வாக்கு ஒன்று எழுந்தது. தாமிரபரணி நதிக்கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனது பாதங்கள் பதிந்துள்ள தடயம் இருக்கும். அந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு எனக்கு ஒரு கோயிலை எழுப்பி வழிபட்டால் உனக்கு அழகான ஆண் மகவு ஒன்று பிறக்கும்....