Screen Reader Access     A-AA+
அருள்மிகு குளத்தூரய்யன் சாஸ்தா திருக்கோயில், Thrirunelveli Town - 620076, திருநெல்வேலி .
Arulmigu Kulathoor Ayyan Sastha Temple, Thrirunelveli Town - 620076, Tirunelveli District [TM037996]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வட்டம் நயினார்குளம் அருகில் 100ஆண்டுகளுக்கு முன்னால் ஊர் பொது மக்களால் கட்டப்பட்டது. இத்திருக்கோவில் நயினார் குளத்தின் கரையில் அமைந்துள்ளதால் மூலவர் அருள்மிகு குளத்தூர் அய்யன் சாஸ்தா என்று அழைக்கப்பட்டுவருகிறது. இத்திருக்கோவில் வழிபடுவதால் நினைத்த காரியங்கள் கைக்கூடும்.

புராண பின்புலம்

-திருநெல்வேலி ஜில்லா என்று பொதுவாக அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடு செய்வது விசேஷமாக நடைபெறும். இதற்காக அன்று இந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல சாஸ்தா கோவில் இருக்கும், அந்தக் குடும்பத்திற்கென ஒரு குலதெய்வமும் இருக்கும். பெரும்பாலும் சாஸ்தா கோவில்கள் ஒவ்வொரு சாஸ்தா பெயரிலும் தனித் தனியாக இருக்கும். குல தெய்வங்கள் அந்த சாஸ்தா கோவில்களில் பரிவார தெய்வங்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கும். சில குடும்பங்களுக்கு எல்லை காவல் தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும். சில குடும்பங்களுக்கு அந்த ஊரின் பிரதான தெய்வங்களான சிவன், முருகன்,...