Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவசைலநாதசுவாமி திருக்கோயில், Sivasilam - 627412, தென்காசி .
Arulmigu Sivasailanaathaswamy Tirukovil, Sivasilam - 627412, Tenkasi District [TM038000]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு சிவசைலநாதசுவாமி திருக்கோயில் சிவசைலம், இறைத்தொண்டில் தன்னை இணைத்துக்கொண்ட சுதர்சனப்பாண்டியன் ஒரு நாள் சிவதரிசனம் செய்ய சிவசைலத்திற்கு வந்து சேர்ந்தான் கோவிலுக்கு வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியதால் மன்னனால் கோவிலுக்குச்செல்ல முடியவில்லை, மனம் தளராது எவ்வாறேனும் இறையை வழிபட்டே தலைநகர் திரும்ப வேண்டும் என்று எண்ணி வெள்ளம் வடிவதற்கு இறைவனை இறைஞ்சினான். வேண்டுவர்க்கு வேடிக்கை காட்டுவதை வடிக்கையாக்கொண்ட அப்பன் வேந்தனிடத்து விளையாட நினைத்தார். வெள்ளம் வடிந்து மன்னன் ஆவலுடன் திருக்கோயில் நுழைந்தபோது, பூஜை முடிந்து கோயில்நடைஅடைக்கப்பட்டது. மூடிய நடை திறப்பதற்கில்லை. மன்னனின் தீடிர் வருகையைக் கண்ட அர்ச்சகர் கோயிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாகக்கொடுத்து, அவள் தலையில் சூடியிருந்த மலர் மாலையைத் திரும்பப் பெற்று மன்னனுக்குப் பிரசாதமாகக் கொடுத்தார். ...