அருள்மிகு தென்கரை மகாராஜேஸ்வரர் திருக்கோயில், Chitoor - 627127, திருநெல்வேலி .
Arulmigu Thenkarai Maharajeshwarar Temple, Chitoor - 627127, Tirunelveli District [TM038027]
×
Temple History
தல பெருமை
திருநெல்வேலி மாவட்டம் சித்தூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள மகாராஜேஸ்வரர், தன்னை கை தொழும் பக்தர்களுக்கு மகத்தான வாழ்வு அருள்கிறார்.
பந்தள ராஜாவின் மகன் ராஜராஜன், அண்ணன் மணிகண்டன் என்னை விட்டு பிரியக் காரணமான, நாடாளும் அரியனை எனக்கு வேண்டாம். அரண்மனை வாழ்க்கையும் வேண்டாம். மனம்போன போக்கில் பயணிக்கப் போகிறேன். எனக்கென்று ஓர் இடம் அமையும் அவ்விடம் தேடிச் செல்கிறேன் என்று கூறிக்கொண்டு பெற்றோர் தடுத்தும், செவிமடுக்காமல் புறப்பட்டார். பாண்டிய நாடான நெல்லைச் சீமையில் வள்ளியூர் அருகேயுள்ள ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட கண்ணநல்லூர் கிராமத்தில் சித்தூரில் நம்பி ஆற்றின் தென்கரையில் மணல்திட்டில் வந்தமர்ந்தார்.
இந்த நம்பி ஆற்றின் தென்கரையில் வந்து அமர்ந்த ராஜராஜன், தனது அண்ணன் மணிகண்டனை நினைத்து தியானம் செய்தார். அரிஹரசுதன் அய்யப்பன் அவரிடத்தில் உன்னுள்...திருநெல்வேலி மாவட்டம் சித்தூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள மகாராஜேஸ்வரர், தன்னை கை தொழும் பக்தர்களுக்கு மகத்தான வாழ்வு அருள்கிறார்.
பந்தள ராஜாவின் மகன் ராஜராஜன், அண்ணன் மணிகண்டன் என்னை விட்டு பிரியக் காரணமான, நாடாளும் அரியனை எனக்கு வேண்டாம். அரண்மனை வாழ்க்கையும் வேண்டாம். மனம்போன போக்கில் பயணிக்கப் போகிறேன். எனக்கென்று ஓர் இடம் அமையும் அவ்விடம் தேடிச் செல்கிறேன் என்று கூறிக்கொண்டு பெற்றோர் தடுத்தும், செவிமடுக்காமல் புறப்பட்டார். பாண்டிய நாடான நெல்லைச் சீமையில் வள்ளியூர் அருகேயுள்ள ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட கண்ணநல்லூர் கிராமத்தில் சித்தூரில் நம்பி ஆற்றின் தென்கரையில் மணல்திட்டில் வந்தமர்ந்தார்.
இந்த நம்பி ஆற்றின் தென்கரையில் வந்து அமர்ந்த ராஜராஜன், தனது அண்ணன் மணிகண்டனை நினைத்து தியானம் செய்தார். அரிஹரசுதன் அய்யப்பன் அவரிடத்தில் உன்னுள் நான் கலந்தேன். உன்னை தரிசிப்பவர்கள் உன்னில் என்னைப் பார்க்கலாம் என்றுரைத்தார், அசரீரியாக. வெட்டவெளிப் பகுதியான கானகத்தில் ஆற்றின் கரையோரம் மணல் குவிந்திருந்த சற்று உயர்ந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தார் ராஜராஜன். ராஜராஜன் தான் இங்கே அமர்ந்திருப்பதை ஊரறிய, உலகறியச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்.
. அப்போது சித்தூரில் நிலையம் கொண்டிருப்பது அந்த அய்யப்பனின் தம்பி ராஜராஜர் என்றனர். அவருக்கு உரிய பூஜை செய்தபின் முயற்சியுங்கள் காரியம் வெற்றியாகும் என்றனர். பூஜை செய்யும் விதம்பற்றிக் கூறியவர்கள், ராஜராஜர் என்பதை தெய்வாம்சம் கொண்டவர் என்பதால் ராஜராஜ ஈஸ்வரர் என்றும் மகாராஜஈஸ்வரர் என்றும் அழைத்து வழிபடுமாறு கூறினார்.
அதுவே மகாராஜேஸ்வரர் என அழைக்கப்படலாயிற்று