தல வரலாறு

தமிழர்களின் வாழ்வோடு இணைந்த குலதெய்வ வழிபாடுகளின் ஒரு பகுதியாக ஆங்காங்கே அய்யனார் சாமிக்கென திருக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கீழப்புலியூர் அருள்மிகு காவிரி அய்யன் சாஸ்தா என்கிற திருக்கோயில் குலதெய்வ வழிபாட்டுக்கான கோயிலாகும். இங்கு வழக்கமான சாஸ்தா கோயிலில் காணப்படுவது போல் சாஸ்தா பூரண,புஷ்கலை என்கிற தேவியருடன் அருள்பாலிக்கிறார். தற்போது இருக்கிற திருக்கோயில் 1923 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.