அருள்மிகு வேம்படி இசக்கியம்மன் திருக்கோயில், Thoothukudi - 628003, தூத்துக்குடி .
Arulmigu Vembadi Essakiamman Temple, Thoothukudi - 628003, Thoothukudi District [TM038194]
×
Temple History
தல பெருமை
தூத்துக்குடி நகர், திருமந்திர நகர் எனும் சிறப்பு பெற்ற ஊர், செந்தூரில் சூரன் வதம் செய்து முடிந்த பின்னே திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் இந்திரன் மகளளான தெய்வானைக்கும் திருமணத்தை முடித்து நெய்தல் நிலமாகவும் சோலைகள் சூழ்ந்த இடமாகவும் இருந்தால் இவ்வூர் திருமந்திர நகர் ஆனது. உபதேச நேரத்தில் கடல் அலையின் இறைச்சலும், காற்றால் பனைமரங்களின் காய்ந்த ஓலைகளின் சப்தமும் இடையூராய் இருக்க தேவியின் கருத்தறிந்து அவைகளின் சப்தங்கள் குறைக்கச் செய்ய அப்படியே இன்னும் சப்தமின்றி இருப்பதாக நம்பப்படுகிறது.
காணுமிடமெல்லாம் திருக்கோயில்கள் பக்திப் பரவசங்கள்.தூய மனம் கொண்டேரர் வாமும் ஊர் என சொல்லும்...தூத்துக்குடி நகர், திருமந்திர நகர் எனும் சிறப்பு பெற்ற ஊர், செந்தூரில் சூரன் வதம் செய்து முடிந்த பின்னே திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் இந்திரன் மகளளான தெய்வானைக்கும் திருமணத்தை முடித்து நெய்தல் நிலமாகவும் சோலைகள் சூழ்ந்த இடமாகவும் இருந்தால் இவ்வூர் திருமந்திர நகர் ஆனது. உபதேச நேரத்தில் கடல் அலையின் இறைச்சலும், காற்றால் பனைமரங்களின் காய்ந்த ஓலைகளின் சப்தமும் இடையூராய் இருக்க தேவியின் கருத்தறிந்து அவைகளின் சப்தங்கள் குறைக்கச் செய்ய அப்படியே இன்னும் சப்தமின்றி இருப்பதாக நம்பப்படுகிறது.
காணுமிடமெல்லாம் திருக்கோயில்கள் பக்திப் பரவசங்கள்.தூய மனம் கொண்டேரர் வாமும் ஊர் என சொல்லும் வண்ணம் வெண்மை தாங்கிய உப்பளங்கள் சரித்திரிப் புகழ் பெற்ற துறைமுக நகர். முத்துக்குளிக்கு முதூர் சுகந்திர போராட்ட வரலாற்று நாயகர்கள் வாழந்த திருவூர்.
சமயகுரவர்களுக்கு மடாலயங்கள் எமுப்பி பக்தியையும் இலக்கியத்தையும் வளர்த்து இதிகாச காலத்துக்கு முன்பே சிறப்புற்று விளக்கிய இவ்வூரில் அருள்மிகு வேம்படி இசக்கியம்மன் திருக்கோயிலும் பிரதானமாக திகழ்கின்றது அதனைக்காண்போம்
திருக்கோயில் பெருமை எண்ணிய எண்ணப்படியே எல்லாம் நடப்பதால் நாள் தோரும். பக்த பெருமக்கள் வந்து வழிபாடு செய்வதையும் அகமகிழ்வதையும் நாள்தோரும் காணும் காட்சியாய் விளங்குகின்றது. இப்படிப்பட்ட சிறப்புடைய திருக்கோயில் வரலாற்றைக் காண்போம்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் வ.உ.சி கல்லூரிக்கு அருகில் நிற்கும் தெய்வீக வேம்பின் அடியில் குடியின்கொண்டியிக்கிறாள். அருள்மிகு வேம்படி இசக்கியம்மன் கிட்ட தட்ட சுமார் 100 ஆண்டுகளைக் கடந்து அருள்பாலித்து வரும் இசக்கியம்மனின் அருளை வார்த்துதகளால் விவரிக்க முடியது கோடிக்கணக்கான பக்தர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருபவர். அந்தத்தாயை நெஞ்சில் நிறுத்தும் போது நெக்குருகி கண்ணீர் மல்கும். சுமார் 150 ஆண்டுகளிக்கு முன்பு தூத்துக்குடி சில மைல்கள் தொலைவில் இருந்து ஒரு பாரவண்டியன் தூத்துக்குடி நோக்கி வந்தது. அப்போது முன்பாரம் அதிகமாக இருந்ததை உண்ர்ந்து வண்டிக்காரர் சிறது தூரம் கடந்த பிறகு வண்டியை நிறுத்தினார். சாலையின் அருகே ஒரு பாறால்கல்லைக்கண்ட அவார் அதை வண்டியின் பின்புறத்தில் ஏற்றி பாரத்தைச்சமப்படுத்தினார். வண்டி ஒரு வேப்பமரத்தின் அருகில் வந்த போது, மாடுகள் இரண்டு பாரம் தாங்காதது போல் கமுத்தைக் கீழே தொங்கப் போட்டன. வண்டிக்காரர் வண்டியின் பின்புறம் உள்ள பாராங்கல்லை எடுத்து மரத்தின் அடியில் போட்டு விட்டுச் சென்று விட்டார். அந்த வேப்பமரத்தை சுற்றியிருந்த இடம் அப்போது கருவேல முற்காடாக இருந்து.ஆடு மேய்க்கும் வயதானவார் அந்த கல்லில் தலை வைத்து உறங்கியபோது ஒர் அசரீரி கேட்டது. என் மீது தலை வைத்து படுத்திருக்கிறாயே என்ற குரலை கேட்டு விழித்தெமுந்தார் வயதானவர் சுற்றும் முற்றும் பார்க்க யாரும் தென்படவில்லை மரத்தடியில் குடிகொண்டவ்ள்.
மறுநளும் அதே கல் மீது தலைவைத்து உறங்கினார் அன்று இரவு அவர் கனவில் தோன்றிய அம்மன் நீ தலை வைத்து உறங்கும் கல்லில் தான் நான் உறைந்திருக்கிறேன் என்னை நீராட்டி திலகமிடுகிறாலா எனக்கேட்டிக்கிறாள்? எனக்கேட்டிருக்கிறாள். அந்த வயதானவர்,மெய்சிலிர்த்து எமுந்து, வேப்பமரத்தடிக்கும் சென்றார். கருங்கல்லை நீரரட்டி திலகமிட்டார்.இது பல நாட்கள் தொடர்ந்தது. அவர் அம்மனை வழிபட்டு வர நரட்கள் தொடர்ந்தது. அவர் அம்மனை வழிபட்டு வர அவரது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக்கண்டார் அம்மனின் சக்தியை பரிபூரணமரக உணர்ந்தார்.அந்த வழியாக அருகில் உள்ள மில்லுக்கு வேலைக்குச்செல்லும் மக்களிடம் அந்தப்பெரியவர் அம்மனிள் அருளை எடுத்துக் கூறினார். பிறகு அவர்களும் வழிபட ஆரம்பித்தனர் தங்களது குறைகளை அம்மனிடம் முறையிட்ட அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. நாளடைவில் வேப்பமரத்தின் அடியில் சிறு மாடம் கட்டப்பட்டு ,மாடக்கோயில் எமுந்தது பிறகு கற்கோயில் எமும்பியது. இப்படியாக தூத்துக்குடி அருள்மிகு வேம்படி இசக்கியம்மன் திருக்கோயில் உருவாயிற்று. அம்மனுக்கு நித்திய பூiஐகள் நான்கு வேளை நடைபெறுகின்றன். வருடந்தோறும் ஏப்ரல் மாத்தில் சிறப்பாக கொடை விழா நடைபெறுகிறது. பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் விசேஷ அலங்காரமும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தபடி வீற்றிருக்கிறார் அருள்மிகு வேம்படி இசக்கியம்மன்.
தூத்துக்குடி நகர் வந்து இக்கோயில் இருக்கும் இடத்தின் அருகே உள்ள வேம்பு மரத்தின் அடியிலும் இளைபாறியுள்ளாள் இசக்கியம்மன் என்ற பெயரில் வந்து இளைப்பாறிய இடங்களில் எல்லாம் இந்த அம்பாளின் பெயரால் திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்பிக்கை கொண்ட மக்கள் இன்று நம்பிக்கையோடு மக்கள் நாள் தோரும் கூட்டமாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.இசக்கியம்மன் என்ற பெயர் குமரி மாவட்டம் நாகர்கோவில்,திருநெல்வேலிதூத்துக்குடி. போன்ற சார்புடைய இடங்களில் போற்றி துதிக்கும் அளவு சிறப்பாகவுள்ளது. இதை அறிவோர், தெரிவோர் ஓருமுறை இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தால் இந்த உண்மை புலனாகும் இங்கே இருக்குகம் வேம்பு மரம் 100 ஆண்டுக்கு முந்தையது ஆகும்.
இப்படிட்ட சிறப்பு வாயந்த இந்த திருக்கோயிலின் திருப்பணியை செய்து முடிக்க முடிவுசெய்து இத்திருகோயிலின் முதல் கும்பாபிஷேகம் 09.02.1975ல் நடைபெற்றது.
இத்திருக்கோயில் எதிரே காவல் தெய்வமாக சுடலைமாடசாமி கோயிலும் வலது பக்கத்தே அருள்மிகு அய்யப்பசுவாமிக்கு கோயிலும் பக்தர்களின் நன்மைக்காக அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய விழாக்கள் பங்குனி மாதத்தில் கொடை உற்சவமும், ஆனிமாதத்தில் வருஷாபிஷேகம், ஆடிமாதத்தில் வாரந்திர வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், ஆவணியில் விநாயக சதுர்த்தியும் புராட்டாசியில் சரஸ்வதி பூiஐயும், கார்த்திகையில் திருக்கார்த்திகை விழாவும், மார்கழியில் தனுர்மாத சிறப்பு பூiஐ, திருப்பள்ளி எமுச்சியும், தை மாதத்தில் மகர சங்கராந்தி பூiஐ மற்றும் கடைசி தை மாத வெள்ளி பூiஐ சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தினசரி நித்யப்படி தினந்தேரறும் காலை 5 மணிக்கு நடைதிறப்பு, காலை பூiஐ 7 மணிக்கு அபிஷேகம் ஆராதனை, உச்சிகாலம் பூiஐ 12 மணிக்கு மாலை 4 மணிக்கு நடைதிறப்பு பூiஐ 7 மணிக்கு பூiஐகள் அர்ந்தஐரமம், 9.30 இரவு 10மணி நடை அடைப்பு.
பக்தர்கள் யாவரும் தவறாது வருகை தந்து அம்மணை வழிபட்டு எல்லா நன்மையும் பெற அன்புடன் வேண்டுகிறோம்