அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், தபால் நிலையம் அருகில், திருவைகுண்டம் நகர் மற்றும் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் - 628601, தூத்துக்குடி .
Arulmigu Kallapiranswamy Temple, Near Post Office, Srivaikundam - 628601, Thoothukudi District [TM038196]
×
Temple History
தல வரலாறு
ஷேத்திரம்:- ஸ்ரீவைகுண்டம்
தீர்த்தம்:- தாமிரபரணி - ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
மூர்த்தி:- ஸ்ரீவைகுண்டநாதன் (நின்ற திருக்கோலம்)
விமானம்:- இந்திர விமானம், பிரம்மன், இந்திரன், பிருகு, நம்மாழ்வார்,
இவர்களுக்கு பிரத்தியஷம்
உத்ஸவர்:- ...ஷேத்திரம்:- ஸ்ரீவைகுண்டம்
தீர்த்தம்:- தாமிரபரணி - ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
மூர்த்தி:- ஸ்ரீவைகுண்டநாதன் (நின்ற திருக்கோலம்)
விமானம்:- இந்திர விமானம், பிரம்மன், இந்திரன், பிருகு, நம்மாழ்வார்,
இவர்களுக்கு பிரத்தியஷம்
உத்ஸவர்:- ஸ்ரீ கள்ளபிரான்
பாடல்கள்:- நம்மாழ்வார், திருவாய்மொழி, நூற்றெட்டு திருப்பதி, அந்தாதி,
திருப்பணி மாலை
தாயார்:- ஸ்ரீ வைகுண்டநாத நாச்சியார், ஸ்ரீ சோரநாத நாச்சியார்
விருட்சம்:- பவள மல்லி
காலம்:- பாண்டியர் காலம்
தல பெருமை
உற்சவர் சோரநாதன், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தியும் உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும்...உற்சவர் சோரநாதன், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தியும் உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
புராண பின்புலம்
யாவைற்றையும் கடந்து அருவமாய் நின்ற பரம்பொருளாம் இறைவன் ஸ்ரீமத் நாராயணன் பூலோகத்தில் உள்ள பரம பாகவதர்களாகிய பக்தர்களுக்கு அருள்புரியும் வண்ணம் உருவத் திருமேனி கொண்டு ஆங்காங்கே கோயில் கொண்டு எழுந்தருளி ஆசி அளிக்கின்றார். தென் நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திருப்பதிகளில் ஒன்றாகவும், நவத்திருப்பதிகளில் முதலாவதாகவும், வைகுந்தத்திற்கு நிகராகவும் திகழும் பெருமையுடையது. இத்திருவைகுண்ட மாநகரம், வேத சாஸ்திரங்கள் ஞானம் படைக்கும் திறன் ஆகியவற்றை சோமுகாசூரன் கவர்ந்து கொண்டதால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டி தவம் இயற்றிய நான்முகனுக்கு காட்சியளித்து வரங்களை தந்து ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீவைகுண்ட நாதனாக எழுந்தருளியிருக்கிறார்யாவைற்றையும் கடந்து அருவமாய் நின்ற பரம்பொருளாம் இறைவன் ஸ்ரீமத் நாராயணன் பூலோகத்தில் உள்ள பரம பாகவதர்களாகிய பக்தர்களுக்கு அருள்புரியும் வண்ணம் உருவத் திருமேனி கொண்டு ஆங்காங்கே கோயில் கொண்டு எழுந்தருளி ஆசி அளிக்கின்றார். தென் நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திருப்பதிகளில் ஒன்றாகவும், நவத்திருப்பதிகளில் முதலாவதாகவும், வைகுந்தத்திற்கு நிகராகவும் திகழும் பெருமையுடையது. இத்திருவைகுண்ட மாநகரம், வேத சாஸ்திரங்கள் ஞானம் படைக்கும் திறன் ஆகியவற்றை சோமுகாசூரன் கவர்ந்து கொண்டதால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டி தவம் இயற்றிய நான்முகனுக்கு காட்சியளித்து வரங்களை தந்து ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீவைகுண்ட நாதனாக எழுந்தருளியிருக்கிறார்