தல வரலாறு

இத்திருகோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கஜபிருஷ்ட கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இவ்வூர் புழிச்சலூர் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிகிறது. இத்திருகோயிலில் அகத்தீயர் வழிபாட்டதால் இத்திருக்கோயில் அகத்தீஸ்வரர் சுவாமி என பெயர் பெற்றது. மேலும் சனீஸ்வர பகவன் பரிகார ஸ்தலமாக உள்ளதால் இது வடதிருநள்ளார் என்று அழைக்கப்படுகிறது.