Screen Reader Access     A-AA+
Arulmigu Aravinthalochanar Temple, Irattai Thirupathy - 628612, தூத்துக்குடி .
Arulmigu Aravinthalochanar Temple, Irattai Thirupathy - 628612, Thoothukudi District [TM038201]
×
Temple History

தல வரலாறு

தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொணர்கிறார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள். இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்.

இலக்கிய பின்புலம்

அரவிந்த லோசனர் அச்வினி தேவர்களுக்கு அளித்த வரம் அச்வினி தேவர்கள் உனப்படுவோர் இருவர். அவர்கள் வைத்யம் செய்பவர்கள். அவர்கள் பிரமனிடம் சென்று எங்களுக்கும் எல்லா வேள்விகளிலும் மற்ற தேவர்களைப் போல் ஹவிர்ப்பாகம் (பங்கு) கொடுக்கும்படி அருள்புரிய வேண்டும் என்றனர், பிரமன்...