அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில், Thoothukudi - 628002, தூத்துக்குடி .
Arulmigu Theppakulam Mariyamman Temple, Thoothukudi - 628002, Thoothukudi District [TM038211]
×
Temple History
தல வரலாறு
மனிதன் இவ்வுலகில் இன்பாக வாழ தன் வலிமைக்கும் அப்பாற்பட்ட ஓராற்றல் இருப்பதாக நினைத்தான்
’’அழிவு இல முயலும் ஆன்மாக்கள்
...மனிதன் இவ்வுலகில் இன்பாக வாழ தன் வலிமைக்கும் அப்பாற்பட்ட ஓராற்றல் இருப்பதாக நினைத்தான்
’’அழிவு இல முயலும் ஆன்மாக்கள்
வழிபடு தெய்வம் கண்கண்டா அங்கு``
என்ற நற்றினைப்பாடல் தங்கள் முயற்சிக்குத் துணை வேண்டிய மக்கள் தெய்வத்தை வழிபட்டனர் என்பதைக் கூறுகிறது.
இத்திருகோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது இக்கோயில் முன்பு கூரை வேய்ந்து கரணப்பட்டது. எனவே இதை கஙலமண்டபமாக உருவாக்க 30.04.1986ல் கல்மண்டம் உருவாக்கப்பட்டு முதல் குடமுமுக்கு விழா நடைபெற்றது. தெப்பக்குளம் இருப்பதினால் இத்திருக்கோயில் தெப்பகுளம் மாரியம்மன் கோயில் என்ற பெயரைப் பெற்றது. இத்திருக்கோயில் தோன்றியபோதே தெப்பக்குளம் இருந்தது. இக்குளத்தில் தெப்பத்திருவிழரவின் போது தேர் பவனி வருகிறது. சங்க காலத்தில் சிற்ப ஒவியக்கலைகள் வளர்ச்சியுற்றிருந்தன. கோயில்களையும், அரசரின் மாளிகைகளையும், மண்டபங்களையும் சிற்பநூல் வல்லுநர் நாள் குறித்து. நாழிகை பார்த்து நேதறி கயிறிட்டு திசைகளையும் அத்திசையில் உள்ள தெய்வங்களை நேரக்கி வகுத்தனை.
’’இருகோல் குறிநிலை வழக்காது குடக்கோள்
பொருதிறம் சாரா வரை நாள் மயத்து
நூலறி நுண்டிணதிற் கறியிட்டுத்
தேரங் கொண்டு தெய்வ நோக்கில்
பெரும்பெயர் மன்னரிக்கொப்ப மனைவகுத்து``
என்று நெடுநல்வாடை கூறுகின்றன.
மாரியம்மன் சக்தியின் அம்சம். கிரியா சக்தியின் அவதாரமாகும். சில ஊர்களின் எல்லையில் மாரியம்மன் பிரதிஸ்டையாகி இருப்பதினால் இது கிராம தேவை எனவும் அழைக்கப்படுகிறது.
எல்லையில் இருப்பதினால் இயற்கை வளங்கள் மாரியின் சக்தியயினால் பெருகும் என மக்கள் நம்புகின்றனர்.
பக்தர்களுடைய பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றி அருள் பொழியக்கூடிய மாபெரும் சக்தியாக மாரி என்ற பெயரில் திகழ்கிறது. ஒவ்வொரு மாத பௌர்னமி அன்றும் லலிதா இலட்சம் மந்திரங்கள் ஒதப்படுகிறது.
இக்கோயில் அம்பாளின் பின்பக்கம் புற்றுமாரியம்மன் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து சுதை விக்ரங்களாக விநாயகர், சுவாமி அம்பாள், சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் மற்றும் மேற்கு முகமாக சுப்பிரமணியர், காவி, கல்கத்தா காளி, பெருமாள் ஆகிய தெய்வங்கள் சுற்றுப் பிரகாரங்களில் அழிகிய எண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இது இக்கோயின் சிறப்பு அம்சமாகும். இந்த சிறப்பு அம்சம் வேறு எந்த மாரியம்மன் கோயிலும் இடம் பெற்றிருக்கவில்லை.
புற்றுமாரியம்மன் உருவானவிதம்
1999ல் அம்பாள் சர்ப்பாக (பாம்பு) சுவாமியாக, (அம்மன் கொண்டாடி) சுவாமி ஆடும் போது எனக்கொரு இடம் வேண்டு என்று கேட்டதற்கிணங்க அங்கே விமானங்கள்(புற்று) கட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
````நாகர்கோவில் ஒரு சுவாமியாடியின் கனவில் சாமி தோன்றி சர்ப்பத்தைக் கண்ணாடிப் பெட்டியில் அடைத்து நாகர்கோவிலிருந்து திருச்செந்தூர் கொண்டு வந்து சேர்த்தார்.
இதே போல் நம் தூத்துக்குடி மாவட்டத்திலும் கிருஷ்ணமுர்த்திபட்டர் என்பவரின் கனவில் சுவாமி சர்ப்பகாவடி எடுக்குமாறு ர்த்தார். கணபதிபட்டர் முருகனுக்கு சர்ப்பகாவடி எடுத்து சஷ்டி அன்று முருகன் சன்னதியில் சேர்த்தரர்.இதை அம்பாளுக்கு எடுப்பதாக இருந்தால் அம்பாளுக்கு உகந்த நாளான மாசி மகத்தில் எடுக்கலாம்.இது தூத்துக்குடி நடந்த வியக்கத்தக்க உண்மைச்சம்பவம் ஆகும்.