Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், Authoor - 628151, தூத்துக்குடி .
Arulmigu Somanathaswami Temple, Authoor - 628151, Thoothukudi District [TM038216]
×
Temple History

தல பெருமை

பழங்காலத்தில் இப்பகுதி காடாக இருந்து சோமாரண்யம் என்று பெயர் பெற்றிருந்தது. அக்காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னர்களின் பசுக்களின் மேய்ச்சல் தலமாய் இருந்த இப்பகுதியில் ஓர் ஆலமரம் இருந்தது. அவ்வாலமரத்தின் அடியில் பசுக்கள் பால் சொரிந்தததைக்கண்டு ஆநிரை மேய்ப்போன் இச்செய்தியை அரசர் கவனத்துக்கு கொண்டு செல்கிறான். அரசனும் பால் செரரிவதற்கான காரணம் அறிய நேரில் வந்து பார்வையிட்டார். பால் சொரிவதைக்கண்டதும் மரத்தை வெட்டிவிட ஆணையிட்டான். மரத்தை வெட்டுகையில் குருதிவருவதைக் கண்ட மரம் வெட்டுபவர்கள் செய்தியை அரன்மனைக்கு தெரிவித்துவிட்டு வெட்டுவதை நிறுத்தி விட்டனர். அன்றிரவு அரசன் கனவில் இறைவன் அருள்மிகு சோமநாதர் தான் தோன்றி லிங்கமாக எழுந்தருளியுள்ள அந்த இடத்தில் கோயில் ஓன்றை நிறுவுமாறு அருளினார். அரசனும் திருக்கோயில் நிர்மாணம் செய்தார். ஆலமரத்தின் தூரிலிருந்து லிங்கம்...